​கோட்டா, ஹிஸ்புல்லா புகைப்படம் போலியானது - SLPP » Sri Lanka Muslim

​கோட்டா, ஹிஸ்புல்லா புகைப்படம் போலியானது – SLPP

IMG_20191018_103511

Contributors
author image

Editorial Team

கோட்டாபய ராஜபக்ஸவின் புகைப்படத்துடன் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் புகைப்படத்தை இணைத்து சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானது என பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் ஊடகப்பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த புகைப்படம் சம்பந்தமான தகவலை நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம் என அறிந்துக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயகத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் நிராகரிக்க வேண்டும் எனவும், ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் டளஸ் அழகப்பெரும தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka