ஶ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணை » Sri Lanka Muslim

ஶ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணை

ranka1

Contributors
author image

Editorial Team

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்கா மற்றும் 5 பேரை வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி பிணையில் விடுதலை செய்துள்ளார்.

குறித்த 6 பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையும் தலா 2 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணையும் விதித்து நீதவான் குறித்த பிணையை வழங்கியுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்கா மற்றும் 5 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

2011 ஆம் ஆண்டு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka