கல்வியற் கல்லூரிகளுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை » Sri Lanka Muslim

கல்வியற் கல்லூரிகளுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

educat

Contributors
author image

Editorial Team

தேசிய கல்வியற் கல்லூரிகளில் மாணவர் டிப்ளோமா கல்வியை தொடர்வதற்காக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2 குழுக்களின் கீழ் 8,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நாட்டில் உள்ள 19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் பணி அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நில்வளா மற்றும் வடமேல் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்கரளை இணைத்துக்கொள்ளளும் நடவடிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தம்பதெனிய சாரிபுத்திர, ருகுணு, ஹாப்பிட்டிகம, பஸ்துண்ரட்ட மற்றும் புலதிசிபுல தேசிய கல்வியற் கல்லூரிகளுக்காக 28 ஆம் திகதி மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இம்முறை ஆக கூடுதலான மாணவர்கள் ஒரே தடவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமையினால் கல்வியற் கல்லூரிகளில் 430 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி விரிவுரை மண்டபம், தங்குமிட வசதி முதலான அடிப்படை வசதிளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka