பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் தொடர்பில் துரித நடவடிக்கை » Sri Lanka Muslim

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் தொடர்பில் துரித நடவடிக்கை

IMG_20191021_094614

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் தொடர்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பது தொடர்பில் தற்போது முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. சுமார் 3 இலட்சம் மாணவர்களுக்கு இதுவரையில் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 ஆம் திகதி திணைக்களங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சில அதிபர்கள் காலம் தாமதித்து மாணவர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்ததனால் அவற்றை உரிய நேரத்தில் வழங்க முடியாமல் போயுள்ளது. சுமார் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் இவ்வாறு காலம் தாழ்த்தி கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka