ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு » Sri Lanka Muslim

ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

courts

Contributors
author image

Editorial Team

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி சாட்சி வழங்க, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பானை அனுப்பியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீரிஸ்கந்தராசா தாக்கல் செய்ய மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோடதாகொட மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் இந்த அழைப்பானையை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு, குருகந்த ரஜமகா விஹாரையின் விஹாராதியின் இறுதிச் சடங்கை குறித்த விஹாரை அமைந்துள்ள பகுதியில் நடத்துவதற்கு தடைவிதிக்க கோரி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்டோர் செயற்பட்டதன் மூலம் அவர்கள் நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka