அலி சப்ரி சொன்னது பொய்; கோட்டா இன்னும் அமெரிக்க பிரஜையே’ » Sri Lanka Muslim

அலி சப்ரி சொன்னது பொய்; கோட்டா இன்னும் அமெரிக்க பிரஜையே’

IMG_20191112_085831

Contributors
author image

Editorial Team

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான அலி சப்ரி தெரிவித்துள்ளமை பொய்” என,  சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் வர்ணகுரிய மில்ரோய் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களின் பிரதிகளை தம்மிடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று (11) சென்று கடிதமொன்றை ஒப்படைத்த போது தமக்கு இவ்வாறான பதிலொன்றே கிடைத்ததாக மில்ரோய் பெர்ணான்டோ, கூறினார்.

அத்துடன், அவ்வாறான ஆவணங்கள் எதுவும், தமக்கு வழங்கப்படவில்லை என்பதால் அதன் பிரதிகளை ஒப்படைக்க முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழு தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் அமெரிக்க பிரஜையே, அவர் தவறான வேட்பாளர், நாட்டு மக்கள் ஏமாற்றமடைந்துவிட கூடாது. இவ்வாறு பொய் கூறுவது வேடிக்கையான விடயமாகும். ஆவணங்களை ஒப்படைக்காத நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இப்போதும் அமெரிக்க பிரஜை என்பது தெளிவாகின்றது. இவ்வாறான ஒரு நிலையில், நாட்டு மக்கள் அமெரிக்க பிரஜைக்கு வாக்களிப்பதா என்று சிந்திக்க வேண்டும்” என்றார்.

Web Design by The Design Lanka