புத்தளம் குப்பை பிரச்சினைக்கு சஜித்திடம் நிலையான தீர்வு » Sri Lanka Muslim

புத்தளம் குப்பை பிரச்சினைக்கு சஜித்திடம் நிலையான தீர்வு

IMG_20191112_145227

Contributors
author image

Editorial Team

புத்தளம் மாவட்டத்தின் செய்வினையாக மாறிபோயுள்ள குப்பை பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கி அதன் ஊடாக மக்களை மீட்டெடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கத்தில் புத்தளம் தொடக்கம் அநுராதபுரம் வரை அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ நகரில் நேற்று (11) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இல்லியாஸ், சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்…

´விவசாய துறையை மேம்படுத்த வரலாற்று ரீதியான புரட்சியை ஏற்படுத்த தீர்மானித்துள்ளேன்.

நீர்ப்பாசன திட்டத்தின் நீல்லபிம திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்.

காட்டு யானைகளும் மக்களுக்கும் இடையில் தொடரும் மோதல்களுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும்.

நன்னீர் உள்ளிட்ட மீன் பிடியை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளேன்.

இந்த பகுதியில் கலாசார சுற்றுலா துறையை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

உப்பு தொழில்துறையை அபிவிருத்தி செய்ய சிறப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.

கம் உதாவ திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஆனமடுவ கிராமத்தை கட்யெழுப்ப தனது ஆரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்´ என்றார்.

Web Design by The Design Lanka