SLMC, ACMC எதிர்காலம் என்ன ? » Sri Lanka Muslim

SLMC, ACMC எதிர்காலம் என்ன ?

party

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Sivarajah

சொல்ல நினைத்தேன்…!

சில மாதங்களுக்கு முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அமைச்சுப் பதவிகளை துறந்தபோது அது தவறு என்று நான் குறிப்பிட்டேன்… இல்லை அது சரி என்று பலரும் வாதிட்டனர்.

சரி… துறந்ததே சரி… மீண்டும் பதவியேற்றது எந்த அடிப்படையில் ? முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்ந்ததா என்று கேட்டேன்.. அதற்கும் விமர்சனங்கள்…

மு. கா எம் பி ஹாரீஸிடம் அப்போது இதுபற்றி நான் கேட்டேன்…

“ இல்லை அண்ணன்… பதவி ஏற்பதில் எனக்கு உடன்பாடு இல்லை…சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து இரு பிரதான கட்சிகளுடனும் பேசுவோம். ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு சில காலம் தானே இருக்கிறது. அதுவரை பொறுத்திருந்து சரியான முடிவை எடுப்போம்..”

என்று என்னிடம் சொன்னார் ஹாரீஸ் எம் பி… ஆனால் அவர் தவிர மற்றவர்கள் பதவி ஏற்றனர்..

சரி…இப்போது வரவுள்ள அமைச்சரவையில் இந்த இரண்டு கட்சிகளும் இடம்பெற வாய்ப்பில்லை…

எனக்குத் தெரிந்தவரை அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னரும் இந்த கட்சிகள் கோட்டாவின் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பில்லை…

அந்த குறிப்பிட்ட காலத்துக்கே அமைச்சுப் பதவிகள் இல்லாமல் இருந்தவர்கள் இனி ஐந்து வருட காலம் எப்படி இருக்கப் போகிறார்கள் ? மக்களுக்காகத்தான் – சமூகத்துக்காகத்தான் அந்தப் பதவிகள் ஏற்கப்பட்டதாயின் இனி 5 வருடங்கள் மக்களின் நிலைமை என்ன? இந்த கட்சிகள் இல்லாமல் அவைசார் மக்களின் நலன் கவனிக்கப்பட்டால் இவற்றின் எதிர்காலம் என்ன ?

தொலைநோக்கில்லாத அரசியல் பார்வை .

Web Design by The Design Lanka