ஜனாதிபதி விடுவிப்பு » Sri Lanka Muslim

ஜனாதிபதி விடுவிப்பு

courts

Contributors
author image

Editorial Team

ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது.

குறித்த வழக்கு விசாரணைகள் சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்படுவதாக, கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.

குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய 6 பிரதிவாதிகள் மீது எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அடுத்த அமர்வில் தெரிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

Web Design by The Design Lanka