64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு » Sri Lanka Muslim

64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

IMG_20191205_164623

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 64 பேரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் இன்று (05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ரிஸ்வான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நுவரெலியாவில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைமையத்தில் ஆயுத பயிற்சி எடுத்ததாக குறித்த நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Web Design by The Design Lanka