குளிர் காலத்தில் சுற்றுலாவை மேற்கொள்ள சிறந்த நாடு இலங்கை » Sri Lanka Muslim

குளிர் காலத்தில் சுற்றுலாவை மேற்கொள்ள சிறந்த நாடு இலங்கை

srilanka

Contributors
author image

Editorial Team

குளிர் காலத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இணையத்தளமான ரளயவழனயல.உழஅ என்ற இணையத்தளமே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களில் இடம்பெறும் குளிர் காலத்தில் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் அதிக பனிப்பொழிவு இடம்பெறும். இதன் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமது நத்தார் விடுமுறை மற்றும் புத்தாண்டு உதயத்தை கொண்டாடுவதற்காக வெப்பமான நாடுகளுக்கு செல்வது வழமை.

இதற்கு அமைவாக குளிர் கலைத்தில் வெப்ப காலநிலையைக் கொண்ட சுற்றாடலில் விடுமுறையை அனுபவிப்பதற்கான 20 நாடுகளில் இலங்கையை இந்த இணையத்தளம் முதலாம் இடத்தில் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka