அமெரிக்க தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு » Sri Lanka Muslim

அமெரிக்க தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு

IMG_20200216_123657

Contributors
author image

Editorial Team

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசுக்கு  இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை குறித்து விளக்கம் பெற்றுக்கொள்ளவே அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த நம்பகமான சான்றுகளின் அடிப்படையில், இராணுவத் தளபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தமது நாட்டக்குள் நுழைய தடை விதித்தாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே அது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு இலங்கை அரசு அமெரிக்காவிடம் கேட்டுள்ளது.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka