பொறுப்புடன் கருத்துகளை பகிர்வோம்! - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Tholar Balan

கொரோனா குறித்து சிலர் முகநூலில் பொறுப்பற்ற முறையில் பதிவுகள் இடுகிறார்கள்.

அதுவும் தம்மை இலக்கியவாதிகளாக அடையாளப்படுத்தியவர்கள் மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் எழுதுகிறார்கள்.

நெருக்கடியான வேளைகளில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பதிவுகள் இட வேண்டும் என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றார்கள்.

கொரோனா இழப்புதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதேபோன்று பல இழப்புகளை மனித இனம் சந்தித்துள்ளது.

தான் சந்தித்த இழப்புகளை எல்லாம் எப்படி மனித இனம் கடந்து வந்திருக்கிறதோ அதேபோன்று இந்த கொரோனா அழிவில் இருந்தும் மனித இனம் மீண்டு எழும்.

ஸ்பெயின் அரசி இறந்துவிட்டார் என்று நாம் நம்பிக்கையை இழக்க தேவையில்லை. மாறாக கொரோனா பாதிப்படைந்த கனடா பிரதமரின் மனைவி நலமாகி விட்டார் என்பதை கவனத்தில் கொள்வோம்.

கொரோனா பாதிப்பில் இறந்தவர்களைவிட நலம் பெற்று வீடு திரும்பியவர்கள் அதிகம் என்பதை கவனத்தில் கொள்வோம்.

சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட பிரதேசம் இப்போது இனி எந்த ஆபத்தும் இல்லை என திறந்து விடப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்வோம்.

எனவே மிக விரைவில் இந்த கொரோனா அழிவில் இருந்து மனித இனம் மீண்டு எழும் என்று நம்புவதற்குரிய விடயங்களில் கவனம் செலுத்துவோம்.

ஆனால் இப்போது எழும் முக்கிய கேள்வி என்னவெனில் இந்த கொரோனாவினால் ஏற்படும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளை மனிதஇனம் இனி எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதே.

ஏனெனில் இத்தாலியில் கொரோனா நெருக்கடி ஏற்பட்டவேளையில் அது அங்கம் வகிக்கும் ஜரோப்பிய யூனியன் உதவவில்லை. மாறாக கியூபா சீனா போன்ற நாடுகளே உதவியுள்ளன.

இதனால் இத்தாலி நாட்டு மக்களுக்கு ஜரோப்பியன்யூனியன் மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஏதோவொரு கோபம் ஏற்பட்டு வருகிறது.

மக்களின் இந்த கோபம் உலக ஒழுங்கில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? இதுவே இன்று விடை காண வேண்டிய முக்கிய கேள்வியாக எம்முன் உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team