எதுவித உதவிகளுமின்றி அளிக்கம்பை மக்கள் » Sri Lanka Muslim

எதுவித உதவிகளுமின்றி அளிக்கம்பை மக்கள்

IMG_20200329_234728

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(ஹாசிம் சாலிஹ்)

#கொரோனா கால உணவு #நிவாரண உதவிகளும் #அன்றாடங்காய்ச்சிகளான #அழிக்கம்பை கிராம மக்களுக்களும்

அழிக்கம்பை. இலங்கையின் உன்மையான சுதேசிகள் இயக்கரும் நாகரும்என்றால் அவர்களை இப்போது நாம் காணக்கூடிய அரிய இடங்களில் ஒன்று ஆக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள அழிக்கம்பை அடையாளப்படுத்தப்படுகிறது.
இருப்பினும் இவர்கள் உன்மையில் 2ம் ராஜ சிங்கன் காலத்தில் அவனது அரன்மனையில் வேலை செய்வதற்காக இந்தியாவின் தெலுங்கு தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள்.
2ம் ராஜசிங்கனின் தோல்வியின் பின் அவனது அரண்மனையிலிருந்தவாறு தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக காடுகளுக்குள் ஒடித்தப்பியவர்கள். திக்கற்றுத் திசையற்று அலைந்து திரிந்தனர். காடுகளுக்குள் ஒழிந்திருந்தவாறே கோயில் தீத்த காலங்களில் வந்து போகிறவர்கள்.

இவர்கள் அழிக்கம்பைக்கு வந்து 68 வருடங்கள். கதிர்காமக் காட்டுக்குள் சுற்றித் திரிந்த இவர்கள் திருக்கோயில் தீத்தத்துக்கு வந்து போகின்ற வழக்கமிருந்தது. நாளடைவில் அழிக்கம்பையில் தங்கிவிட்டார்கள். இப்போ இவர்கள் கத்தோலிக்கர்கள்.ஆனால் திருக்கோயில் தீத்தம் வந்தால் ஊரே வெறிச்சோடி விடும். அவர்கள் வழக்கப்படி அனைவரும் தீத்ததுக்கு கிளம்பிவிடுவர்.

அழிக்கம்பையில் வாழ்வோர் ஆதிவாசிகளல்ல; வேடுவர்களல்ல.வனக்குறவர்களல்ல.

இலங்கையில் ஆதிவாசிகள் வாழ்வது மஹியங்கணையிலும் திருகோணமலையில் ஒரு பிரதேசத்திலுமாகும். அவர்களே வேடுவர்கள்.

அழிக்கம்பை வாசிகளின் ஒரு பிரிவினர் காஞ்சிரங்குடாவில் 150குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் கத்தோலிக்கர்களல்ல 5ம் வேதத்தை பின்பற்றும் கிறிஸ்தவர்கள்.மற்றொரு பிரிவினர் அனுராத புரத்தில் தம்புத்தே கமவில் வாழ்கின்றனர். இதில் 1200 குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் சிங்கள பௌத்தர்களாக ஓரளவு நல்ல நிலையில் வசதியாக வாழ்கிறார்கள்.

அழிக்கம்பை மக்கள் தினக்கூலிகளாக காலத்தை தள்ளிவந்த இவர்கள் அன்றாடங்காய்ச்சிகளாகவே இன்றும் உள்ளனர். இதுவும் ஒருவகை மலையகமே.

இலங்கை பன்மைத்துவத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் அழிக்கம்மை மக்கள் முக்கித்துவமுடையவர்கள்.

தற்போதும் வழக்கொழிந்த பழைய தெலுங்கு மொழியை வீட்டு மொழியாக பேசிவருகின்றனர். அந்த தெலுங்கி இந்தியாவில் இவர்கள் தாயகமான தொலுங்கானா மானிலத்திலுள்ளவர்களாலும் புரிந்து கொள்வதற்கு கஷ்ரமான வழக்கொழிந்த தெலுங்கு. அவ்வாறே அவர்கள் தனிமைப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா காலமாகயால் அழிக்கம்பை வாசிகள் பிரதான வருமானமாக இருந்த தினக்கூலி வேலைகளைச் செய்ய முடியாத நிலை தொடர்வதால் தங்களது அன்றாட உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பரிதாபகரமான வாழ்வை எதிர் கொண்டுள்ளனர். தூரத்தே அமைந்த ; மற்றக் கிராமங்களுடனான தொடர்புகள் தனித்து வாழும் கிராமமாகையால் இவர்களுக்கான நிவாரண உதவிகளும் சென்றடையாத நிலையுள்ளது.
இங்கு 410 குடும்மங்கள் வாழ்கின்றார்கள். இக்குடும்மங்களைச் சேர்ந்த 1700 போர்.அதிகமானவர்கள் காலாகாமாக வறுமையில் வாடுவோராகும்.
இதில் 43 விதவைகள். அவர்களது குடும்ப சுமை தாங்கமுடியாது மிக நலிவடைந்த நிலையிலுள்ளனர்.
இக்கிராமத்தில் 60 அனாதைச் சிறுவர்கள் பராமரிப்ப்பின்றியுள்ளார்கள். அங்கவீனர்கள் 09 பேருள்ளனர்.

முக்கியமாக குழந்தைகளுக்கான பால்மா, அரிசி, சீனி, பருப்பு, மீன்ரின் இவர்களுக்கு அவசிய தேவையாகவுள்ளது.

எனவே, இம் மக்களை நம்மைப் போன்ற சமமாகமதிக்கப்பட வேண்டிய கடமை நமக்குள்ளது. இந்த கொரோனா காலத்தில் இவர்களது உணவுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு நம்மால் முடியுமான வழிமுறைகளில் உதவ முன்வருவோம்.

Web Design by The Design Lanka