அட்டுளுகமையில் இருந்து எவரும் மருதமுனைக்கு வரவில்லை .......! - Sri Lanka Muslim

அட்டுளுகமையில் இருந்து எவரும் மருதமுனைக்கு வரவில்லை …….!

Contributors
author image

Editorial Team

வீணான வதந்தி பரப்பாதீர்கள்…

அட்டுளுகமையிலிருந்து ஒருவர் அல்லது சிலர் என எவருமே மருதமுனைக்கு இக் கால கட்டத்தில் வரவில்லை என்பது ஊர்ஜிதமான தகவலாகும்.

பாக்கியத்துஸ் ஸாலிஹாத் ஜும்ஆ பள்ளிக்கு அருகில் வசிக்கும் நுஸைர் என்பவரின் இல்லத்துக்கு − அவரது மனைவி உறவு முறையான ஒருவர் வந்திருப்பதாகவும் − அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் − அவர் மருதமுனையில் பல இடங்களுக்கு சென்றுள்ளார் என்றும் − இப்போதும் அவர் நுஸைரின் வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுவது அப்பட்டமான பொய்யும் இட்டுக்கட்டுமாகும்.

இது தொடர்பில் மருதமுனையில் இயக்கப்படும் வட்ஸ்அப் குரூப் ஒன்றில் ஒருசிலர் குரல் பதிவை இட்டு , அதனை பலர் Share செய்துள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

இன்று 30 ஆம் திகதி காலை 6.30 மணியளவில் − நுஸைரின் இல்லம் சென்றேன்.நுஸைரை சந்தித்தேன்..அவ்வாறான அட்டுளுகம நபரின் அல்லது நபர்களின் எந்தவொரு நடமாட்டமும் அங்கு இல்லை.

நுஸைரின் மனைவி கூட மருதமுனைக்கு வரவில்லை.

நுஸைர் திருமணம் செய்திருப்பது அட்டுளுகம யுவதியை. அவர் ஒரு வைத்தியர். இதனைக் கொண்டு வீண் வதந்திகளை பரப்புவது அபத்தமானதாகும்.

” நான் அட்டுளுகமைக்குச் சென்று மனைவியை சந்தித்துவிட்டு இற்றைக்கு 14 நாட்களுக்கு முன்பே மருதமுனைக்கு வந்துவிட்டேன். இக்கால கட்டத்தில் அட்டுளுகமையில் இருந்து எவரும் எனது வீட்டுக்கு வரவில்லை..குர்ஆன் மீது சத்தியமாக ” என்று மிகவும் வேதனைப்பட்ட நிலையில் நுஸைர் குறிப்பிட்டார்.

தயவுசெய்து , இவ்வாறான வீண் வதந்திகளை பரப்பாதீர்கள். வடஸ்அப் குரூப் நடத்தும் Admin , இவ்வாறான குரல் பதிவுகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். தீர ஆராய்ந்த பின் பதிவிடுங்கள்.

இக்கால கட்டம் மிகவும் ஆபத்தானது. கொரோனா தொடர்பில் ஒரு சிறு தகவல் வெளியானால் கூட அது பெரும் பூகம்பத்தை உண்டாக்கிவிடும். மட்டுமன்றி , அவ்வாறான வதந்தி பரப்புவோர் , குறித்த குரல் பதிவுகள் பொய் என கண்டறியப்பட்டால் அதற்கான தண்டனை மிகப் பாரதூரமானது. Admin இன் நிலை அதைவிட மோசமானது. என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

இவ்வாறான வீண் வதந்தி தமக்கு அல்லது தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக பரப்பப்பட்டால் − அவ்வாறானோரின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை ஆதாரமின்றி குரல் பதிவிடுவோர் , அதனை பரப்புவோர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊரடங்கு நீக்கப்பட்ட இன்று கூட ஹொரவப்பத்தானை , கஹட்டகஸ்கிலிய , கலன்பிந்துநெவ போன்ற”கிராமங்கள் முடக்கப்பட்டிருப்பதுபோல் , மருதமுனையும் அநியாயமாக முடக்கப்பட வேண்டும் என்றா இவ்வாறான வதந்தி பரப்புவோர் ஆசைப்படுகின்றார்கள் ? என்ற கேள்வியும் இப்போது மருதமுனை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது..

தற்போது , குறித்த குரல்,பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன மருதமுனையைச் சேர்ந்த சிலரால் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அட்டுளுகமை இளைஞனுக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது கடந்த 26 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.

( A H M Boomudeen )

Web Design by Srilanka Muslims Web Team