கொரோனா வடிவில் மூன்றாம் உலகப்போர்? - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Fahmy Mohamed -UK

கடந்த நவம்பர் மாதம் சீனா அரங்கேற்றிய கொரோனா படம். பலரும் பலவிதமாத கண்ணோட்டத்தில் நோக்குகின்றனர். அத்துடன் இதற்கான காரணத்தை பலகோணங்களிலும் தேடுகின்றனர். இது இறைவன் செயற்பாடு என்ற நம்பிக்கையை கடந்து மனித மற்றும் விஞ்ஞானத்தின்்மீதான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

மனித உயிர்களுடன் சவாலாகிவிட்ட கொரோனாவிற்கான காரணத்தை “பொருளாதார யுத்தம்” என்ற கண்ணோட்டத்தில் நோக்குவோம்.

இது வளர்ச்சிகண்ட நாடுகளுக்கு இடையில் பொருளாதார ரீதியில் நடக்கின்ற விஞ்ஞானத்தை மீறிய குடியேற்றவாதமாக கருதப்படுகிறது.

இதன் மூலமான சகல பலன்களையும் சீனா அனுபவிக்கத் தொடங்கி உள்ளது.

1-வயோதிபர்களை பராமரிப்பதில் சீனா பாரிய சவால்களை எதிர்கொண்டது. காரணம் அவர்களால் நாட்டிற்கு எந்த வருமானமும் இல்லை என்பதால், திடீரென 2015ம் ஆண்டுக்குப் பின்னரான அதிகரித்த வயோதிபர்களால் நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதில் சிக்கல் உருவானது.

இதனால் வயோதிபர்களை இலக்குவைத்து குரோனா படத்தின் திரைக்கதை உருவானது.

2- கருப்புப் பணம் மற்றும் வரி செலுத்தப்படாத வியாபாரத்தினை நாட்டின் பொருளாதாரத்தில் உள்வாங்க திட்டமிட்டனர். இதனால் நாட்டை இழுத்து மூடி சகல கருப்புப் பணம் மற்றும் வியாபாரத்தை வெளியே கொண்டு வருவதற்கு கொரோனா திரைக்கதை எழுதினர்.

3-அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு மொத்தமான செயற்பாடுகளால் 2018ம் ஆண்டிற்குப் பின்னர், சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் வளர்ச்சியிலும் பாரிய தோல்வி கண்டது. இது 2020 வரை தொடர்ந்தால் சீனா உலகில் தனிமைப்படுத்தப்படும் என பல நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர். ஆகவே உலகின் கவனத்தை தனது பக்கம் இழுப்பதற்கும் , தன்மீதான உலகத்தின் கொள்கைரீதியான தாக்குதல்களை தணிக்கவும் கொரோனா என்ற திரைக்கதையை உருவாக்கினர்.

இதன்படி உலகத்தின் முதல்தர பொருளாதார நாடான சீனாவுடன், இரண்டாவது இடத்தில் இருக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் மூன்றாவது இருக்கும் அமெரிக்கா இணைந்தமை 2019ல் சீனாவிற்கு தலையிடியைக் கொடுத்தது.

4-சீனாவில் ஆரம்பித்த கொரோனா மூலமாக , சீனாவில் முதலீடு செய்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமது 40% கு மேலான முதலீடுகளை மூன்று மாத்த்திற்குள் இழந்தது. இதன் மூலம் சீனாவின் கொரோனா படம் திரையிடப்பட்டது.

5-தற்போது சீனாவில் முடிவும் தருவாயில் கொரோனா உள்ளது. கொலோனாவின் தாயகமான Wuhan city தற்போது முழுமையாக மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கொரோனா உலகை முழுமையாக தாக்கத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் கொரோனா படத்தின் வில்லனாக சீனா வேடம் பூண்டுள்ளது.

6- தற்போது ஐனவரி மாதம் தொடங்கிய கொரோனாவால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம் 30% இழப்பை அடைந்துள்ளது. ஆனால் கொரோனா மூலம் சீனாவின் பொருளாதாரம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும் கடந்த 27 மார்ச 2020 அறிக்கையின் பிரகாரம் 94% இழப்புகளை சீனா மீளவும் சரிசெய்துள்ளது.

7-கொரானாவின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாக்க தற்போதுதான் உலக நாடுகள் ஆயத்தமாகிறது. ஆகவே உலக வல்லரசுகளுக்கு மரண பயத்தை உருவாக்கி தனது கொள்கை மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட வேகமாக சீனா களத்தில் இறங்கி உள்ளது. இதனால் உலக சகல நாடுகளுக்கும் கொரோனா நோய் தொடர்பான நிபுணத்துவம் மற்றும் உபகரணங்களை கோடிக் கணக்கில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. இதற்காக பல கம்பனிகளை ஆரம்பித்துள்ளது. அதற்காக நாட்டில் கொரோனாவால் 3 மாதங்களாக வேளை இழந்தவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேளைவாய்ப்புக்களை வழங்கத் தொடங்கி உள்ளது.

8-உலக சுகாதார நிறுவனம்(WHO) அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்தது.இதனால் கடந்த காலங்களிங் உருவான கொடிய நோய்களான எபோலா உற்பட கொரோனாவை விடக் கொடிய நோய்களுக்கான மாத்திரைகளை அமெரிக்கா சார்பான நாடுகளுக்கே WHO அங்கீகாரம் வழங்கியது. இதனால் உலக சுகாதார உற்பத்திக்கான வருமானத்தில் சீனா பாரிய வீழ்ச்சி கண்டது. குறிப்பாக சுகாதார மற்றும் இரசாயன மருந்து ஏற்றுமதியில் மட்டுப்படுத்தப்பட்ட அங்கீகாரமே வழங்கப்பட்டது. தற்போதைய கொரோனாவிற்குப் பின்னர் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் முழு ஆளுகைக்குள் வந்துள்ளது.

9- உலகின் அரபு மற்றும் வளரச்சி அடையும் ஆசிய நாடுகள் மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவால்்அமெரிக்க பொருளாதாரம் தரைமட்டமாக அழிவினை நோக்கி நகர்கிறது. ஆகவே சுமார் 1 அல்லது இரண்டு வருடத்திற்கு அமெரிக்கா அதனது உள்நாட்டைக் கட்டியெழுப்புவதிலே நேரத்தை வீண்டிக்கும். இந்த இடைவெளியில் தனது ஆதிக்கத்தை உலகத்தில் நிலைநாட்டுவதில் சீனா சாதித்து இடலாம் என்ற நப்பாசையில் உள்ளது.

10- அமெரிக்க அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வெளிவிவகார செயற்பாடுகளில் 85% மானவை மத்திய கிழக்கு நாடுகளுடனே கடந்த 10வருடங்களாக இருந்தது. இதனால் சீனா அதனது பொருளாதார ஆதிக்கத்தை மத்தியகிழக்கு தவிர்ந்த நாடுகளில் நிலைநிறுத்தியது( இலங்கை உற்பட).2018 முதல் ஐனாதிபதி டொனால்ட டிரம்பின் அரசாங்கம் மத்திய கிழக்குடனான தொடர்பை 15% மாக குறைத்தது. காரணம் மத்திய கிழக்கல் எண்ணை வளம் குறைந்துள்ளதும் அதிகமான பாதுகாப்புச் செலவுமாகும். இதனால் அமெரிக்காவின் 2018 ம் ஆண்டுக்குப் பின்னரான உலகத்தின் பல நாடுகள் மீதான நெருக்கம் சீன ஆதிக்கம் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய சவாலை உருவாக்கி உள்ளது.

ஆகவே சீனா மற்றும் அமெரிக்கா கூட்டனிகளுக்கு இடையில் உலகமயமாக்களில் வலுவாக இருந்த “பொருளாதார குடியேற்றவாதம்”” போராக வெடித்து. உலகம் மூன்றாம் ஆயுத உலகப்போரை எதிர்பார்த்து இருந்த வேளையில், ஒரு கிருமி(Virus) மூலமாக “இரசாயன யுத்தம்” (Biological war)மூன்றாம் உலகப் போராக முழு உலகத்தையும் அமைதியாக்கி ஆட்சி செய்கிறது.

Note:ஆசிய மற்றும் பசுவிக் பிராந்திய ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ள எனது ஆக்கத்தின் சுருக்கமான பகுதி

Fahmy Mohamed -UK

Web Design by Srilanka Muslims Web Team