அடுத்த கட்ட ஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல்: » Sri Lanka Muslim

அடுத்த கட்ட ஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல்:

IMG_20200330_194239

Contributors
author image

நன்றி இணையம்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அப்படியே இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும்- இன்று, மார்ச் 30ஆம் திகதி, பிற்பகல் 2.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் – ஏப்ரல் 01ஆம் திகதி, புதன், காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துச் செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் – நடைமுறையில் உள்ள முறைமைகளைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா நோய்க்கிருமித் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் அனைத்துமே மக்களின் நலனுக்காகவே ஆகும் என்பதனை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அந்த நடைமுறைகளையும் அரசாங்க அறிவுறுத்தல்களையும் – பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றது.

மேலும் – கண்டி மாவட்டத்தில் அக்குரணை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம ஆகிய கிராமங்கள் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த கிராமங்களுக்குள் எவரும் வருவதோ அல்லது அவற்றிலிருந்து வெளியேறுவதோ – மறு அறிவித்தல் வரை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka