Covid_19; ஜனாஸாக்களை செய்வது? » Sri Lanka Muslim

Covid_19; ஜனாஸாக்களை செய்வது?

IMG_20200331_104115

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கையில் முஸ்லிம்கள் Covid_19 நோய் காரணமாக அல்லது உறுதிப்படுத்தப்பட்டு மரணித்தால், 6 அடி ஆழத்தில், மரணம் உறுதிப்படுத்தப்பட்டு 4 மணித்தியால இடைவெளிக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது.

ஆனால், ஒருவர் Covid-19 நோய்த்தொற்றுக்கு உள்ளானால், அவரது குடும்பம் அல்லது அவர் வசித்த வீடு தனிமைப்படுத்தப்படும்.இதனால், அவர் மரணித்தால் அவரது பிள்ளைகளால் அல்லது குடும்பத்தால் நல்லடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

மேலும் நோய்த்தொற்று கண்டு பிடிக்கப்பட்டவர் பல இடங்களுக்கு சென்று இருந்தால், அந்த பிரதேசமே தனிமைப்படுண்தப்படும். இதனால் உறவினர்களாலும் நல்லடக்கம் செய்ய முடியாமல் ஆகலாம்.

மேலும், உறவினர்கள் உடனடியாக முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறியே. இதனால், 4 மணித்தியாலயங்களுக்குள் நல்லடக்கம் செய்வது முடியாத காரியமாக இருக்கும்.

மேலும் அடக்கம் செய்ய கனரக வாகனங்களை பயன்படுத்த வேண்டி உள்ளதால், ஏழைகளால் முடியாது போகலாம்.

இவ்வாறான காரணங்களால் அரசு ஜனாஸாவை எரிக்க வேண்டி ஏற்படலாம்.
இதனை தவிர்க்க நாம் என்ன செய்யலாம்.

Option 1:
ஒவ்வாரு ஊரிலும் ஜனாஸா நல்லடக்க குழு ஒன்றை உருவாக்கி, கனரக வாகனங்கள் உட்பட தேவையான பொருட்களோடு தயாராக இருத்தல்.

மேலும், மரணம் சம்பவித்த வைத்தியசாலைக்கு அருகே உள்ள குழு ஜனாஸாவை 4 மணித்தியாலயத்திற்குள் அடக்கம் செய்தல்.

Option 2.
அரசிடம் ஒப்படைத்தல்.

உங்கள் பத்துவாக்கள், அரசியல் சண்டைகளை விடுத்து, தேவையான ஆலோசனைகளை சொல்லுங்கள்.

H.M.Nizam

Web Design by The Design Lanka