கூட்டுப் பொறுப்புடன் செயற்படுவோம் - Sri Lanka Muslim
Contributors
author image

Fauzer Mahroof

மிக நெருக்கடியான காலத்தில், கட்சி அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, செயற்பட வேண்டிய தருணமிது! அனர்த்தங்களையும், அதர்மத்தையும் தடுக்க இலங்கையிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் அரசியல் தலைவர்களும் தங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

மரணித்த உடலை வைத்துக் கொண்டு , தமது கட்சி அரசியலை செய்யாதீர்கள். இது வெறும் போலியான கபட நாடகம். ஏனெனில் கடந்த காலத்தில் இலங்கையிலுள்ள எல்லா முஸ்லிம் தலைவர்களும் ஆட்சி அதிகாரத்திற்கு ஆதரவு வழங்கி, மக்கள் பாதிக்கப்படும் போது உடந்தையாக இருந்தவர்களே. இந்த விடயத்தில் ஒருவரை விட மற்றவர்கள் எந்த வித த்திலும் உசத்தி இல்லை.

நாம் இன்று , ஒருவரை நோக்கி குற்றம் சாட்டும் போது, தம்மை நோக்கியும் கடந்த காலத்தில் இது போன்ற குற்றங்களுக்கு நேரடியாகவும், மெளன சாட்சியாகவும் உடந்தையாக இருந்ததை “இன்றைய வசதிக்காக “இன்று சார்பு நிலை கேள்வி தொடுப்போர் மறந்து விடக்கூடாது!

ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்தால், இங்கு குதர்க்கவாதம் செய்வது ஒன்றுக்கும் பயனற்றது என்பது தெளிவு. அதாகப்பட்டது இலங்கையின் இன்றைய எந்த முஸ்லிம் தலைமைகளாலும், இந்த ஆளும் குழுமங்கள் முன்னும், இவர்களின் அதிகார+ இனவாத நிகழ்ச்சி நிரல்களிலும், ஒரு ஆணியைத்தானும் இவர்களால் புடுங்க முடியாது என்பதுதான் உண்மை.

ஆகவே , அனைவரும் இணைந்துதான் இப்படியான இக்கட்டான நேரத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டி உள்ளது என்கிறோம்.

என்னுடைய கட்சிxஎதிர்க்கட்சி அரசியலை – மரணித்த உடலையும், மரணிக்க காத்திருக்கும் மனிதர்களையும் வைத்து நடத்தாதீர்கள். இது இக்கட்டான , இப்படியான அனர்த்த நேரத்தில் செய்யும் பொறுப்பான நடத்தையல்ல.

உங்கள் உணர்வுகள் நேர்மையானது என்றால், குற்றம்சாட்டுவது அல்ல, கூட்டுப் பொறுப்பினையும், இணைந்த செயற்பாட்டினையும் வலியுறுத்துவதே அதன் இன்றியமையா குரலாக இப்போது முன் எழ வேண்டும்.

இதனை எழுதும் நானும், இதனை படிக்கும் நீங்களும் நாளை உயிர் வாழ்வோம் என்கிற நம்பிக்கையில்லா நொடியில் நாம் வாழ்கிறோம் என்பதை மனதில் பதித்து வைப்போம்!

Web Design by Srilanka Muslims Web Team