அக்குறணையில் பாதுகாப்பு அதிகரிப்பு » Sri Lanka Muslim

அக்குறணையில் பாதுகாப்பு அதிகரிப்பு

IMG_20200324_091333

Contributors
author image

Editorial Team

அக்குறணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சகல கிராம சேவகர் பிரிவுகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதேச செயலாளர் இந்திக குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், கண்டி-அக்குறணை பகுதியில் சகல வீதிகளிலும்; பாதுகாப்பு தரப்பினர் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.

அக்குறணை -தெலப்புகஹவத்த பிரதேசத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நேற்று (31) அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் குறித்த தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்தே, தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் நோக்கில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka