மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை » Sri Lanka Muslim

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

medical

Contributors
author image

Editorial Team

நாட்டில் தேவைக்கேற்றளவு போதுமான அளவு மருந்துப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் பொது மக்கள் தேவையற்ற குழப்ப நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும்; சங்கம் தெரிவித்துள்ளது.

தட்டுப்பாடு இன்றி, தொடர்ச்சியாக மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான மருந்துகளை களஞ்சியப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேவைக்கு அதிகமான மருந்துகளை வைத்திருப்பதன் மூலம் அதன் தரம் குறைவடைவதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka