வைரஸ் தடுப்பு; பில்வாரா மாடல்’ - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

ஏப்ரல் 14க்குப் பிறகு என்ன நடக்கும் என்பது தான் இப்போது நம் முன் நிற்கும் கேள்வி. முழுமையான திட்டம் எதுவும் இன்னும் வெளிப்படவில்லை. காரணம் அது நோய் பரவும் விதத்தைப் பொறுத்தது என்பதால்.

இப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்ற வெளியிட்டிருக்கிறது. அதன்படி ‘பில்வாரா மாடல்’ வெற்றிகரமானதைத் தங்களது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இது குறித்து வாசித்தவற்றில் இருந்தும், கேட்டவற்றில் இருந்தும் தொகுத்திருக்கிறேன்.

பில்வாரா என்பது என்ன?

பில்வாரா என்பது ராஜஸ்தானில் உள்ள ஒரு மாவட்டம். 30 – 35இலட்சம் வரை மக்கள் தொகை கொண்டது. அங்கு ஒரு மருத்துவருக்கு முதலில் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

நேற்றைய தின நிலவரப்படி அங்கு வரை 274 பேர் வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்திய அளவில் அதிகளவு வைரஸ் தொற்று இருந்த மாவட்டங்களில் பில்வாராவும் ஒன்றாக இருந்தது.

ராஜஸ்தான் அரசும், மாவட்ட நிர்வாகமும் வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அந்த விளைவாக, மார்ச் 30ல் இருந்து இப்போது வரை ஒரே ஒரு நோயாளிக்கு மட்டுமே ஒட்டுமொத்தமான மாவட்டத்திலும் வைரஸ் உள்ளது.

இந்த அந்தளவுக்கு வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விதத்தையே பில்வாரா மாடல் என்கின்றனர்.

பில்வாரா மாடல் என்பது என்ன?

ராஜஸ்தானில் ஒரு மாவட்டமான பில்வாராவில் அடுத்தடுத்து தொற்று வேகமாகப் பரவுவது கண்டறியப்பட்டவுடன் மாநிலத்தின் சுகாதாரச் செயலர் ரோஹித் குமார் சிங் தலைமையின் கீழ் மாநில அரசு திட்டங்களைக் கொண்டு வந்தது. அங்கு தொடர்ந்து எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் குறித்து ரோஹித் குமார் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

பில்வாரா மாடல் என்பது ஆறு அம்சங்களைக் கொண்டது

1. மாவட்டத்தைத் தனிமைப்படுத்துவது
2. எந்தப் பகுதியில் அதிகளவு தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது
3. ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி கண்காணிப்பினை மேற்கொள்ளுதல்
4. தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை உடனுக்குடன் கண்டுபிடிப்பது
5. உடனடியாக அவர்களை தனிமைப்படுத்துதல்
6. கிராமப்புறங்களை கண்காணித்தல்

இருபது பேருக்குத் தொற்று இருப்பது தெரிய வந்ததும் (மார்ச் 20) இந்த ஆறு வழிமுறைகளும் உடனடியான பின்பற்றப்பட்டன. அதாவது தேசம் முழுமைக்கும் ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு.

பிறகு பத்து பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு மேற்பார்வையாளர். இவர்கள் மேற்கொண்ட சர்வே மூலம் ஆறு இடங்கள் அதிக தொற்று பாதித்த இடங்கள் என தெரிய வந்தது.

தொற்று பாதித்தவர்கள் யாரிடமெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்பதைக் கண்டறிந்தார்கள்.

பிறகு தொற்று பரவிய இடத்தில் உள்ள 30 இலட்சம் பேரையும் ‘ஸ்க்ரீனிங்; செய்தனர். இதன் அர்த்தம் இந்த 30 இலட்சம் பேரையும் தனித்தனியாக பரிசோதனை செய்தார்கள் என்பது அல்ல. ஏனெனில் அதற்கான நேரமோ, வசதியோ நம்மிடத்தில் இல்லை.

யாருக்கெல்லாம் ஃப்ளு அறிகுறிகள் இருந்ததோ அவர்களை பரிசோதனை செய்தார்கள். அறிகுறி இருப்பவர்களை ஒருநாளைக்கு இருமுறைக்கு பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.

இந்த பரிசோதனையில் 14000 பேர் கண்டறியப்பட்டனர். இவர்களில் நோய்த் தொற்று உள்ளவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டன்ர்.

நோய்த் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்த நான்கு தனியார் மருத்துவமனைகளை ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் 25 படுக்கைகள் என நூறு படுக்கைகள்.

இது தவிற 27 உள்ளூர் தனியார் ஹோட்ட விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றின் மூலம் 1541 அறைகள் கிடைத்தன.

நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகத்துக்கு இடமானவர்கள் கூட அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இப்படி செய்ததால் கடந்த ஏழு தினங்களில் வைரஸ் தொற்று கொண்ட ஒரு நோயாளி கூட இல்லை என்பது தான் வெற்றி.

இப்போதும் 950 பேர் நேரடி கண்காணிப்பில் தனிமைப்படுத்தபப்ட்டுள்ளனர்.
7620 பேர் வீட்ட்னுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருநாளைக்கு இருமுறை பரிசோதிக்கப்படுகின்றனர்.

கடுமையான ஊரடங்கு பிறப்பிக்ப்பட்டதால் அத்தியாவசமான பொருட்களை அரசே நேரடியாக வினியோக்கிறது. பல இடங்களில் நேரடியாக உணவினை சமைத்து வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.

இது பில்வாராவில் செயல்படுத்தபப்ட்ட திட்டம்.

இது நமக்கு நம்பிக்கையளிக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் இப்போது அநேகமாக அங்கு புதிதாய் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இல்லை என்பது முக்கியம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுமைக்கும் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து அறிக்கையில் நீண்ட விளக்கங்கள் தந்துள்ளனர்.

அதன்படி ஒவ்வொரு பகுதிக்கும் செயல்படுத்தப்படும் என்பது தெரிகிறது.

நன்றி : The Print, Economic Times

Web Design by Srilanka Muslims Web Team