ஐ.நா.சபையின் அழுத்தம்; பா.ஜ.வின் கருத்தில் மாற்றம் - Sri Lanka Muslim

ஐ.நா.சபையின் அழுத்தம்; பா.ஜ.வின் கருத்தில் மாற்றம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபிசேகம் முகம்மது

———-

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் நட்டா தப்லீக் ஜமாத்தினர் மீது அவதூறு பரப்ப வேண்டாம் என்று தனது கட்சி தலைவர்களிடம் வேண்டினார்.

டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் தப்லீக் ஜமாத்தினரின் ஒன்றுகூடலுக்கு பிறகு அவர்களின் காரணமாக தான் நாட்டில் கரோனா வைரஸ் பரவியது என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் இதற்கு கரோனா ஜிஹாத் எனப் பெயரிட்டார்கள். ஒருதலைபட்சமான ஊடகங்கள் தப்லீப் ஜமாத்தை தடை செய்ய வேண்டும் என பரப்புரை செய்துகொண்டிருந்தார்கள். அதுமட்டுமின்ற இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும் என கூறிவந்தார்கள். கரோனா வைரஸ் சீனாவின் யூஹான் நகரிலிருந்து பரவவில்லை மாறாக டெல்லி மர்கஸிலிருந்து தான் பரவியது என்பதையெல்லாம் கூறிக் கொண்டிருந்தார்கள்.

டெல்லி மாநில பாரதிய ஜனதா தலைவர் மனோஜ் திவாரி இவை அனைத்தும் டெல்லி மர்கஸின் திட்டமிட்ட சதி என்றும், அந்த மர்கஸுக்கு சீல் வைக்க வேணடும் எனவும் கோரிக்கை வைத்துவந்தார்.

ஆனால் கடந்த தினம் ஐ.நா.சபையின் கூட்டம் நடைபெற்றது. சபை முடிவுக்கு பிறகு *ஐ.நா.சபையின் தலைமை செயலாலர் அன்டனியோ குவூட்ரஸ் பிரஸ் மீட்டடிங்கில் கூறினார்: ஐ.நா.சபை கூட்டத்தில் கரோனா ஒரு கொடிய நோய் என்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதிலே மத அடிப்படையில், மற்றும் வர்க்க அடிப்படையில் பாகுபாடு, பிரிவினை இருக்கக்கூடாது. மனிதநேய கடைமைகளை மதித்து நடக்கவேண்டும். எந்த நாடாவது ஏதேனும் பிரிவினர், வர்க்கத்தினர் மீது பாகுபாடு காட்டினால் அந்நாட்டுக்கெதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.*

ஐ.நா.சபையின் இந்த அழுத்தத்திற்கு பிறகு நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் சிந்தனை போக்கு மாறிவிட்டது. *இன்று அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா தனது உரையில் கூறினார்: கட்சியின் உறுப்பினர்கள் யாரும் எவ்வித கருத்துக்களும் பகிர வேண்டாம். எந்த அமைப்பினர் மீதும் அவதூறு பரப்ப வேண்டாம். இதுவொரு கொடிய நோயாகும். அதை எதிர்க்கும் ஆற்றல் யாரிடமும் இல்லை.*

இது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் சன்ஜய் சிங் கூறினார்: ஐ.நா.சபை மிகவும் சரியான தருணத்தில் தனது தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. தப்லீக் ஜமாத்தினரை குறித்து அவர்கள்தான் நாட்டில் கரோனா வைரஸை பரப்பியுள்ளார்கள் என்ற சூழல் உருவாக்கப்பட்டுவந்தது. இது ஒரு கோணத்தில் முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கான திட்டமாகும். இதுபோன்று திட்டம் தீட்டுபடுவர்களுக்கு ஐ.நா.சபை கடிவாளம் இட்டது.

மேலும் அவர் கூறினார்: இப்போது கரோனா வைரஸிற்கு எதிராக முழுநாட்டுமக்களும் ஒருசேர இணைந்துள்ளார்கள். மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள், மற்றும் சீக்கிய மத ஆலயங்கள் உட்பட அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் நாட்டிலே ஒரு அசாதரண சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பேச்சு நாட்டை பாதுகாத்துள்ளது. கரோனா வைரஸ் ஒரு கொடிய நோயாகும் என்பதே உண்மை. அதிலே யாருடைய பின்பலமும் இல்லை. அனைவரும் ஒன்றினைந்து அதை எதிர்ப்பது அவசியமாகும். முழுநாட்டினரும் ஒரு சேர இணைந்திருக்கும் வேளையில் பாரதிய ஜனதா தலைவர்கள் ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பாக கருதிய இத்தருணத்தில் அவர்களுக்கு கடிவாளம் இடப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team