முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக்கொள்ளும் - Sri Lanka Muslim

முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக்கொள்ளும்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Siva

முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக்கொள்ளும் என்றார்கள் நமது ஆசான்கள்.அது நுாறுசதவீதம் உண்மை என்பதை கொரோனா இன்று நிரூபித்து வருகிறது.

தங்களது இலாப வேட்டைக்காக உலகம் முழுவதும் அடக்குமுறையை திணித்தும் போர்களை நடத்தியும் கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்த உலகப் பெரு முதலாளித்துவத்தால் இதற்காக உருவாக்கிய அணுஆயுதங்கள் ஏவுகணை

கள் உள்ளிட்ட எந்த ஆதங்களாலும் கொரோனாவை அழிக்க முடியவில்லை.ஆயுத மேலாதிக்க பலம் கொண்டு பல அரசுகளையும் விடுதலைப் போராட்டங்களை

யும் நிர்மூலமாக்கிய உலகச் சண்டியர்கள் இன்று கண்ணுக்கு தெரியாத ஒரு வைரசை அழிக்க முடியாமல் திணறுவதும் அவர்கள் தயாரித்துக் குவித்த போராயுதங்கள் அவர்களை கைவிட்டதையும் நாம் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்த நேரத்தில் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி அண்மையில் வெளியிட்ட கருத்து முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.

“கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த சார்ஸ் பரவி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பின்னும் கொரோனா பரவுவதற்கான அச்சுற்றுதல் இருந்தது. அதன் பின்னாவது கொரோனா பெருந்தொற்றுக்கான மருந்துகளை கண்டுபிடிப்பதில் நேரத்தை செலவிட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை? சந்தை கோரவில்லை. சந்தை தவறான சமிக்ஞைகளை காட்டியது. நாம் நமக்கான மருந்து தயாரிக்கும் பணிகளை தனியார் பெரும் நிறுவனங்களிடம் அளித்துவிட்டோம். அவர்கள் சருமத்திற்கான க்ரீம்களை தயாரிக்க நேரம் செலவிட்டார்கள். மக்களை கொல்லும் பெரும் தொற்றுக்கு மருந்து தயாரிப்பதைவிட, சரும பொலிவுக்கான க்ரீம் தயாரிப்பதுதான் அதிக லாபம் தரக்கூடியது என கருதினார்கள். அதனால்தான் நாம் இப்போது இந்த இடத்தில் நிற்கிறோம்,”

கொரோனாவுக்கு பிந்திய உலகம் இதுவரை நாங்கள் பார்த்த வாழ்ந்த உற்பத்திக்கான சந்தையை உருவாக்கும் உலகமாக இருக்காது.நவ தாராளவாத்தினதும் உலகமயமாதலினதும் சவக்குழியை கொரோனா வெட்டிவிட்டேசெல்லும்.

Web Design by Srilanka Muslims Web Team