ஏழாவது நபரின் மரணமும் நமக்கான படிப்பினைகளும்; கட்டாயம் வாசிக்கவும் - Sri Lanka Muslim

ஏழாவது நபரின் மரணமும் நமக்கான படிப்பினைகளும்; கட்டாயம் வாசிக்கவும்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கையில் கொரோனா நோயினால் இறந்த 7வது நபரின் அலட்சிய போக்கையும் அதன் பாரதூர விளைவு !!! 

இக் கட்டுரை சிங்கள மொழி பதிவின் மொழிமாற்றம்.

Covid 19 வைரஸால் இறந்த ஏழாவது நபர் ஐ.டி.எச். அங்கோடை மருத்துவமனையில் கடந்த 6ம்திகதி சிகிச்சை பெற்று இறந்தார். போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அவரது உடல் நேற்று காலை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இறுதிச் சடங்குகள் கொடிகாவத்த பொது மயானத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அவரது உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இறந்தவர் கல்கிசை மௌன்ட் லேணியாவை சேர்ந்த 48 வயது பிரபல தொழிலதிபரான மாணிக்க வியாபாரி. அவர் கடந்த மாதம் மார்ச் 11 அன்று ஜெர்மனிக்கு சென்று இறுதிப்பகுதியில் இலங்கைக்கு வந்த போது அவரது மகன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.

கொழும்பு நகரசபை பகுதியில் வசிக்கும் இறந்தவரின் நண்பர், கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி(MOH) அலுவலகம் குறித்த மாணிக்ககல் தொழிலதிபரை மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தியது.

ஆனால் அவரோ பொலிஸின் கூற்றுப்படி, பல சந்தர்ப்பங்களில் சுகாதார ஆலோசனையை தவறவிட்டார். தன்னை பிடித்து விடுவார்கள் என கருதி நோயை மறைக்க அந்த நபர் பல இடங்களில் சுற்றிக் கொண்டிருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. பிரசர் அதிகரித்து அவதிப்பட்டு வந்த அவர், கல்கிசை பகுதியிலுள்ள பீரிஸ் மாவத்தையிலிருந்த தமக்கு தெரிந்த மருத்துவரால் சிகிச்சை பெற்றார்.

இருப்பினும் இன்னும் நோய் அதிகரித்ததால் அவருக்கு வேறு இரண்டு பொரளை ,கொள்ளுப்பிட்டி போன்ற இடங்களிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு இடத்திலும் அவரை வைத்தியசாலைக்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும், அந்த நபர் செல்லாமல் பதுங்கியே இருந்துள்ளார். தான் தொழிலதிபர் முடிந்தவரை பணத்தை இறைக்கலாம் என்று சுகாதார அதிகாரிகளின் கருத்தை அலட்சியப்படுத்தியுள்ளார்,

இதனையடுத்து, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர், அந்த நபரை பற்றி அவர் வாழ்ந்த சூழலில் விசாரித்தபோது, அவர் குடும்பத்தினர் எந்த ஒரு தகவல்களை அயலவர்களுக்கு தெரிவிக்காமல் களுபோவிள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் இறந்தவர் இம்மாதம் 14 ஆம் தேதி அங்கோடை ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து மிகத்தீவிரமான நிலையில் I.C.U அனுமதிக்கப்பட்டார்.

இறந்தவர் இந்த நோய் அறிகுறியுடன் அலட்சியம் செய்து 12 ஆம் தேதி இரத்தினனபுரியில் மற்றொரு தொழிலதிபரை சந்தித்த அடையாளம் காணப்பட்டுள்ளார். பின்னர் அவரும் 15 ஆம் தேதி ஏ.டி.எச்.டி. அவரை மருத்துவமனையில் அனுமதிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்தது.

பின்னர், அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா வைரஸ் பரவலடைந்து சங்கிலி போன்று தொற்று ஏற்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள், இறந்தவரின் அவரது தாயும் மூத்த மகனும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஐ.டி .எச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில், இரத்தினபுரி மற்றும் பெல்மதுள்ளை போன்ற பகுதிகள் மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நோயாளி பதுங்கி தமது உறவினர் உள்ள இடங்களில் மறைந்து இருந்த மலையக பகுதி இரண்டு பகுதிகளிலும் உள்ளவர்களுடன் நேரடி தொடர்பு இருப்பதை தொடர்ந்து
அதன்படி, இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை போலீஸ் பகுதிகளில் 67 பேர் நேற்று காலை தியதலாவ தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாருங்கள் தன்னால் இரு கிராமம் இரு வைத்தியசாலை அவர் பழகிய நண்பர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவரின் நிலையை கவனத்தில் கொள்ளாமல் அசட்டைத்தனமாக அலைந்து இறுதியில் உயிரிழந்துவிட்டார்.

நன்றி
தமிழாக்கம்
அமுதன்

Web Design by Srilanka Muslims Web Team