அரசாங்கம் exit plan ஒன்றிற்கு தயாராகிறதா? - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மார்ச் மாதம் 11 ம் திகதி இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு இன்றோடு ஒரு மாதகாலம் நெருங்கிவிட்டது.

ஆனால் இடைக்கிடையே யாருக்கும் புரியாத புதிரொன்று ஓடிக்கொண்டேயிருக்கிறது!

இன்று காலை இலங்கை வானொலியில் கொரோனா பற்றி அறிவுறுத்தும் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய சுகாதார துறையை சேர்ந்த ஒருவர் “அடுத்த 14 நாட்கள் இலங்கைக்கு முக்கியமானவை” என்றார்!

இந்த “அடுத்த 14 நாட்கள் காத்திரமானவை” என்ற கதை அடிக்கடி செய்திகளில் சுகாதார துறையை சார்ந்த பல்வேறு முகாம்களில் இருந்து வந்து விழுந்து கொண்டேயிருக்கிறது.

இந்த கதை எப்போது தொடங்கியதென்றால் இலங்கையில் முதலாவது நோயாளி இனங்காணப்பட்ட அன்றே தொடங்கிவிட்டது.

ஆகவே technically இந்த கதை தொடங்கி இன்றோடு 30 நாட்கள் ஆகின்றன.

இதற்கிடையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் 14 நாட்களை பூர்த்தி செய்தவர்களை மீண்டும் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு ராணுவத்தளபதி அண்மையில் கேட்டிருந்தார்.

இதற்கு காரணம் தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தங்கியிருந்து வீடு வந்து 10 நாட்கள் ஆன பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதேயாகும்.

நிலமை இவ்வாறிருக்க, இன்று சுகாதார துறை அனைத்திற்குமே அமைச்சராக இருக்கும் பவித்ராதேவி அவர்கள் ஒரு கதை விட்டிருக்கிறார்.

அது என்னவென்றால் “நாட்டு மக்கள் காட்டி வருகிற ஒத்துழைப்பை எதிர்வரும் 19 ம் திகதி வரை தொடர்ந்து காட்டி வந்தால் நாம் இந்த கொரோனா COVID 19 இல் இருந்து வெளியேறலாம்” என்றார்!

இது என்ன புதுக்கதை என்று ஆராய்ந்து பார்த்தால் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் மே மாதம் பொது தேர்தலை நடாத்த வேண்டுமென்றால் ஏப்ரல் 20 க்கு முதல் அதனை பிரகடனம் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.

இல்லாவிட்டால் தேர்தலை மே மாதம் திட்டமிட்டபடி நடத்த முடியாது.

ஆகையால் அரசு ஒரு exit plan இற்கான திட்டத்தை யோசிக்கிறது.

Exit plan என்பது ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி மக்கள் எவ்வாறு நடமாடவேண்டும் என சில கட்டுப்பாடுகளுடன் கூடிய வாழ்க்கை முறையாகும்!

உதாரணமாக ஒரு வீட்டிற்கு ஒரு pass வழங்கப்படும் அந்த pass உள்ளவர் மாத்திரமே வெளியே சென்று வரலாம்.

இலங்கையின் மருத்துவ பீடங்கள் இருக்கின்ற பல்கலைக்கழகங்களின் துறைசார்ந்த பேராசிரியர்கள் இணைந்து அண்மையில் நமது நாட்டிற்கு பொருத்தமான ஒரு exit plan ஐ அண்மையில் அரசுக்கு வழங்கியிருந்தார்கள்.

அது நடைமுறைக்கு சாத்தியமானது.

இந்த இறுக்கமான வாழ்க்கை இன்னும் 10 தினங்களுக்குள் தளர்வதற்கான வாய்ப்புகள் உண்டு!

யாரும் கேட்கவேண்டாம் “அந்த இன்று முதல் 14 நாட்கள் முக்கியமானவை” கதைக்கு என்ன நடக்கும் என்று ……

அதெல்லாம் அரசியல் பரிபாசையில் “சும்மா” அல்லது “நிகங்” எனப்படும்.

கொரோனாவே ஒரு அரசியல் என்று நான் சொல்லவில்லை, உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் கொரோனா தொடர்பான அமெரிக்க- சீன முறுகலை பற்றி பேசுகிற போது தெளிவாக சொல்லிவிட்டார்.

கொரோனாவின் அரசியலை அடுத்து வரும் மாதங்களில் உலகம் நிச்சயம் அறிந்து கொள்ளும்.

Web Design by Srilanka Muslims Web Team