அரசு ஏன் தேர்தலை நடாத்த துடிக்கிறது? » Sri Lanka Muslim

அரசு ஏன் தேர்தலை நடாத்த துடிக்கிறது?

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கொரோனா தாக்கத்தினால்;
✔️தனியார் துறை பாதிக்கப்பட்டு – அங்கு பாரிய தொழில் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

✔️வெளிநாட்டவர்கள் வருகை தராமையால் – உல்லாசத்துறை வருமானம் பூச்சிய நிலைக்கு சென்றுள்ளது.

✔️இலங்கையின் தேயிலையை அதிகம் கொள்வனவு செய்யும் மத்திய கிழக்கு நாடுகள், ஜேர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கமுள்ளதால் – தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டு – அதனூடான வருமானம் இல்லாமலாகியுள்ளது.

✔️இலங்கையின் தைத்த ஆடைகளின் பிரதான சந்தையான ஐரோப்பா, அமெரிக்கா போன்றவற்றில் கொரோனாவின் தாக்கமுள்ளதால் – தைத்த ஆடைகளுக்கான கேள்வி வீழ்ச்சியடைந்து – அதனூடாக பெறும் வருமானம் இல்லாமலாகியுள்ளது.

✔️இலங்கையர் அதிகம் தொழில் செய்யும் – மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தாக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடி தோன்றி – ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தொழில்களை இழந்து நாடு திரும்பும் நிலையும் – வெளிநாட்டு வருமானமும் இழக்கப்பட்டுள்ளது / இழக்கப்படும்.

✔️சில தொழிற்துறைகள் இலங்கையில் பூரணமாக முடங்கியுள்ளது (ஆடம்பர பொருட்கள், அழகு சாதன பொருட்கள்)

✔️உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.

✔️அதே நேரம், வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய வழிவகைகளும் கடினமாகியுள்ளதனால் – கிட்டிய காலத்தில் உள்நாட்டு சந்தையில் மிகப்பெரும் பொருட் தட்டுப்பாடு நிலவும்.

✔️உலகின் இரண்டாவது பொருளாதார பலமிக்க நாடான சீனாவிலேயை 6.8% பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருப்பின – இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் (இன்னும் இந்தக் காலாண்டிற்கான மத்திய வங்கி அறிக்கை வெளிவரவில்லை)

இவ்வாறான விடயங்களால் – இன்னும் குறுகிய காலத்தில் இலங்கையில் மிக மோசமான சிக்கல்கள் ஏற்படும். அந்த சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியது அரசாங்கமாகவே இருக்கும்.

????????நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும்
????????பொருட்களுக்கான பெரும் தட்டுப்பாடு ஏற்படும்
????????வாழ்க்கைச் செலவு வானளவு உயர்ந்து நிற்கும்
????????தொழில் இல்லோதோர் எங்கிலும் நிரம்பி வழிவர்
????????அரச உதவியில் தங்கி இருப்போர் அதிகரிப்பர்
????????அரசிடம் மக்களுக்கான அடிப்படைத்தேவைகளை நிவர்த்திக்க கூட நிதி இல்லாத நிலை ஏற்படும்.
????????கடன் பெறவும் வழிகள் இல்லாமல் இருக்கும்
????????வெளிநாட்டு உதவிகள் கிடைக்காது

அதனால், அரசாங்கம் கையறு நிலைக்கு செல்லும். மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்திக்க முடியாத நிலை ஏற்படும். மக்கள் அதிருப்தியடைவர். வீதிக்கு இறங்குவர். போராட்டங்கள் நடத்துவர். ஆர்ப்பாட்டங்கள் செய்வர். அரசு – மக்கள் மோதல்கள் ஏற்படலாம். உயிரிழப்புக்களை சந்திக்கலாம். அதனால், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அரசுக்கு எதிராக மாறலாம். அல்லது, எதிர்பார்த்த அடைவை (2/3) அடைய முடியாமல் போகலாம்.

எனவே, இவை எல்லாவற்றிலுமிருந்து இன்றைய அரசு தப்பிக்க வேண்டுமாயின் – இப்போதே பாராளுமன்ற தேர்தலை நடாத்தி – ஆட்சியைக் கைப்பற்றிவிட்டால் – பின்னர் மக்களை சிறிது காலம் “வாயை வயிற்றைக் காட்டிக்கொண்டு”- நாட்டைக் கட்டி எழுப்ப உதவுங்கள் என்று கூறி சமாளித்துக் கொள்ளலாம் என அரசு நினைக்கிறது. அதனால், கொரோனா வைரஸ் தாக்கம் உக்கிரமாக இருக்கின்ற பயங்கர நிலையிலும் – ஒரு தேர்தலை அவசரமாக நடாத்த முயற்சிக்கிறது.

தேர்தல் காலத்தில் தாராளமாக எந்தத்தடையுமில்லாமல் கொரோனா தொற்று இடம்பெறுகின்ற அதே நேரம் – மரணங்கள் அதிகரித்துச சென்றாலும் – சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளாலேயே கொரோனாவினால் ஏற்பட்ட இறப்புக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் – இலங்கை போன்ற சிறிய வளர்ச்சி குன்றிய நாட்டில் – மரணங்களை தடுத்து நிறுத்த முடியுமா? என – தமது அதிகார வேட்கையால் மரணிக்கப்போகும் ஆயிரக்கணக்கான உயிர்களை கணக்கெடுக்காமல் – தம்மை நியாயப்படுத்த அரசு தயாராகிவிட்டது.

அதாவது, இலங்கை மக்களின் உயிர்களை விட – எமக்கு அதிகாரமே முக்கியம் என்ற தெளிவான நிலைப்பாட்டிற்கு அரசு வந்து – பிணங்களின் மீது தமது சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்ப – தேர்தலை உடன் நடாத்த முயற்சிக்கின்றது. நாம் இதனை தவறு என்று கூறினால் – நம்மில் சிலர் எம்மை விமர்சிக்க முயற்சிப்பதென்பது வியப்பாக இருக்கிறது. ஏன்எனில், கொரோனா காரணமாக நிகழும் மரணங்கள் – இவ்வாறு விமர்சிப்பவர்களின் வீடுகளுக்குள்ளும்தான் நிகழும் என்பதை – அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

– ஏ.எல்.தவம் –

Web Design by Srilanka Muslims Web Team