அமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம் » Sri Lanka Muslim

அமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம்

thondaman

Contributors
author image

Editorial Team

அமரர் ஆறுமுகன் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் தேசிய பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்படுள்ளது.

2020.05.28 – அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்தல்

2020 மே மாதம் 27 ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே மாதம் 28 ஆம் திகதி) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சரவை பேச்சாளர்களான கௌரவ உயர் கல்வி, தொழில் நுட்பம், புத்;தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களும், கௌரவ பெருந் தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண அவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது தெரிவிக்கப்பட்ட விடயங்களின் சுருக்கம் பின்வருமாறு:

கௌரவ சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

கௌரவ சமூக வலுவூட்டல் தோட்ட அடிப்படை வசதிகள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு தொடர்பில் அமைச்சரவை தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தது. இதே போன்று பல தசாப்த காலமாக செயற்பாட்டு அரசியல்வாதி என்ற ரீதியில் பெருந்தோட்டத்துறை மக்களின் சேம நலத்திற்கும் உரிமைக்குமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதைப் போன்று அமைச்சரவையை பிரதி நிதித்துவப்படுத்தி இலங்கை அரசியலுக்கு அவர் வழங்கிய உன்னதமான பங்களிப்பை அமைச்சரவை விசேடமாக பாராட்டியதுடன் இனவாதமின்றி இலங்கையில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட உன்னதமான பணிகள் இதன் போது விசேடமாக நினைவு கூறப்படடது.

இதேபோன்று ,தோட்ட மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகமொன்றை ஏற்படுத்துவது அவரது விசேட எதிர்பார்ப்பாக இருந்ததுடன், இதுவரையில் அது தொடர்பாக உயர்கல்வி அமைச்சுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது கொட்டகலை தேசிய பல்கலைக்கழகமொன்றும் சந்ததென்ன என்ற இடத்தில் விசேட பட்டய பல்கலைக்கழகமொன்றும் அம்பேவல தாவரவியல் உயிரியல் கட்மைப்பு பல்கலைக்கழகம் ஒன்றும் என்ற ரீதியில் புதிய பல்கலைக்கழகம் ஃ உயர்கல்வி நிறுவனத்தை அமைப்பதற்காக எதிர்வரும் வாரத்தில் கல்வி அமைச்சிற்கு அமைச்சரவையினால் ஆவணமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக கௌரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்களை கௌரவிக்கும் வகையில் அவரது உன்னதமான எதிர்பார்ப்பான தோட்டமாணவர்களுக்காக கொட்டகலை தேசிய பல்கலைக்கழகத்தை ஒரு வருட காலத்திற்குள் விரைவாக அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது

Web Design by The Design Lanka