அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு பதவிக்காலம் நீடிப்பு » Sri Lanka Muslim

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு பதவிக்காலம் நீடிப்பு

IMG_20200703_090557

Contributors
author image

Editorial Team

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால், இது குறித்து ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியால் குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிலாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், இடம்பெற்றுவரும் விசாரணைகள் நிறைவடையாதுள்ளமை காரணமாக, அதன் அதிகார காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka