பாரம்பரிய சுதேச மருத்துவ முறையைப் பாதுகாப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டியது அவசியம் » Sri Lanka Muslim

பாரம்பரிய சுதேச மருத்துவ முறையைப் பாதுகாப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டியது அவசியம்

FB_IMG_1594622582985

Contributors
author image

Editorial Team

நன்றி – ஜனாதிபதி முகநூல்

பாரம்பரிய சுதேச மருத்துவ முறையைப் பாதுகாப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டியது அவசியம் என நான் இன்று கண்டியில் தெரிவித்தேன்.

பாரம்பரிய சுதேச மருத்துவ முறையைப் பிரபல்யப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் என்பதனையும் நான் சுட்டிக்காட்டினேன்.

எமது அரசாங்க கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும் கண்டி மாவட்டத்தில் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.

அப்போது, தெல்தெனிய பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் நான் கலந்துகொண்டிருந்த போது – சுதேச மருத்துவர் ஒருவர் முன்வைத்த கோரிக்கை ஒன்றைக் கையேற்ற வேளையிலேயே நான் இதனைத் தெரிவித்தேன்.

சுயதொழில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக கிராமிய கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை அரச வங்கிகளுடன் கலந்துரையாடி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்பதனையும் நான் அங்கு தெரிவித்தேன்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் 2020 தேர்தல் கருப்பொருள் பாடல் என்பவற்றையும் நான் இன்று வெளியிட்டு வைத்தேன்.

மக்களால் முன்வைக்கப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க நாம் முற்படுகின்ற போது – 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஏற்படுகின்ற தடைகளை நான் அங்கு விளக்கியதுடன் – அதனைச் சரி செய்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான நாடாளுமன்றத்தின் அவசியத்தையும் நான் சுட்டிக்காட்டினேன்.

Web Design by The Design Lanka