பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார் » Sri Lanka Muslim

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்

president

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நாட்டின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தற்போது (09) பதவியேற்றார்.

பதவியேற்பு நிகழ்வு களனி ரஜமஹா விகாரையில் இன்று காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்கள் மற்றும் வௌிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளது.

Web Design by The Design Lanka