தேசியப் பட்டியலா ? இருப்புக்கான பாதுகாப்பா ? » Sri Lanka Muslim

தேசியப் பட்டியலா ? இருப்புக்கான பாதுகாப்பா ?

parliment

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சட்டத்தரணி – அஜாஸ்

சஜித் அணியிலிருந்து தமக்கு வாக்களித்தபடி தேசியப்பட்டியல் இடங்களைத் தந்தேயாக வேண்டும் என்றொரு நிலைப்பாடு தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

சஜித்தோடு இருக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் அரசுத் தரப்புக்குத் தாவத் தயாராகிவிட்டார்கள்
என்பதே இதன் பின்னணி…

எதிர்பார்த்த அளவில் சஜித் அணிக்கு ஆசனங்களே கிடைக்கவில்லை எனும் நிலையில் அளித்திருந்த வாக்குறுதிகளை மட்டும் அப்படியே காப்பாற்றியே ஆகவேண்டுமெனக் கேட்பது எவ்வளவுதூரம் நியாயமானது என்பதும் கவனிக்கத்தக்கது…

இத்தகைய கடும்போக்குகள் சிறுபான்மையினர் மீதான சிங்களத்தின் மொத்தக் கோபத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

எந்தப் பக்கத்திலும் பேரம்பேசும் நிலையில் இப்போதைக்குச் சிறுபான்மையினரின் அரசியல் அந்தஸ்து நாடாளுமன்றத்தில் இல்லை, குறிப்பிடத்தக்க அளவில் ஆசனங்கள் இருந்தாலும் தற்போதைய சூழலில் அந்த ஆசனங்களுக்கான டிமாண்ட் பெரிதாக இல்லை. அழையா விருந்தாளிகளாக அரசாங்கத்தில் போய் ஒட்டிக்கொள்ளவும் முடியாது…

இப்படிச் சிந்தித்தால் சிறுபான்மையினர்க்கு எதிரான சட்டத்திருத்தங்களின்போது சஜித் அணியும் மஹிந்தவை ஆதரிக்க முற்படக் கூடும், குறிப்பாக 5% வெட்டுப்புள்ளி நீக்கத்துக்கு சஜித் அணியினரும் ஆதரவளித்துவிடும் ஆபத்துள்ளது…

ஏற்கனவே சஜித் அந்த எஜெண்டாவில்தான் ரணிலை வீழ்த்தி, ஐ.தே.க.வை அழித்துவிட்டுப் புதிதாகக் கிளம்பியுள்ளார்.. இது புரியாமல், சம்பிக்கவின் சதித்திட்டத்தை உணர்ந்து கொள்ளாமல் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒட்டுமொத்தமாக சஜித்துக்குப் பின்னால் கண்ணைமூடிக்கொண்டு போய் இப்போது ரெண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். ஐ.தே.க. அழிக்கப்பட்டது இந்த நாட்டின் ஒட்டுமொத்தத் தேசிய நலன்களுக்கும் ஆபத்தானது, ஜனநாயகத்தின் இருப்புக்கே பாதிப்பானது, இங்கு ஐ.தே.க.வென்பது ரணிலோ சஜித்தோ அல்ல, அது ஒரு தனித்துவமான அரசியல் கலாசாரம். இதைப் பின்னர் விளக்குகிறேன்.

எதற்கும் கொஞ்சம் சமயோசிதமாக நடந்துகொண்டால் சிறுபான்மையினர் நலன்களுக்குப் பாதுகாப்பானது.

ஏதோ ஓரிரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக நமக்கிருக்கும் ஓரிரு அபூதாலிப்களையும் ஒட்டுமொத்தமாக இழந்துவிடத் தேவையில்லை என்பதே இந்த விடயத்தில் எனது நிலைப்பாடு…

இந்தச் சூழலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொறுமையும் நிதானமும் சகிப்புத்தன்மையும் தேவைப்படுகிறது, தேவைப்படும் !

Web Design by The Design Lanka