தேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டுக்கு அழைப்பு - Sri Lanka Muslim

தேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டுக்கு அழைப்பு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தமது அரிய சாதனைகளால் தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்தான பொக்கிஷங்களை ஆவணமாக்கும் செயற்பாட்டின் முதற்கட்ட முயற்சியாக “தேசிய சாதனை மடல்” நூலை வெளியிடுகின்றார் மீள்பார்வை பத்திரிகையில் பத்தி எழுத்தாளராக கடமையாற்றி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் தகவல் அலுவராக பணியாற்றும் “அனஸ் அப்பாஸ்”.

இந்நூல் வெளியீடு ஆகஸ்ட் 7 ஆம் திகதி (எதிர்வரும் செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு கொழும்பு D.R விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.
நாடறிந்த பேச்சாளர் அஷ் ஷெய்க் ரவூப் ஸெய்ன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தபால் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ M.H.M. ஹலீம் அவர்களும், கௌரவ அதிதியாக இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் கௌரவ துன்கா ஒஸ்ஷுஹதார் அவர்களும் வருகை தருகின்றனர்.

நூல் அறிமுக உரையை சிரேஷ்ட ஊடகவியலாளரும், பிரபல கவிஞருமான அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்கள் மேற்கொள்வார். நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் விஷேட உரை நிகழ்த்துவார்.
நிகழ்வை மெருகூட்ட பிரபல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஊடக விருந்தினர்கள், பிரமுகர்கள் பலர் வருகை தருவதுடன்,
சாதனையாளர்கள் 29 பேருக்குமான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இதில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

நூல் வெளியீட்டாளர்களான Focus Media நிறுவனம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பலகத்துறை கலை, இலக்கிய வட்டம், விஷேட பங்காளர் சமூக ஊடக நண்பர்கள் வட்டம் ஆகியன பொது மக்கள், சமூக ஆர்வலர்களை நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கின்றனர்.

– தகவல் : அப்ரிட், சவ்பாத்

Web Design by Srilanka Muslims Web Team