கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டில் » Sri Lanka Muslim

கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டில்

IMG_20200907_083837

Contributors
author image

Editorial Team

கிழக்கு கடற்பிரதேத்தில் MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ தற்பேபது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் நிசாந்த உழுகேதென்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்காக இன்று இலங்கை வந்த விசேட நிபுணர் குழுவினரை சம்பவ இடத்திற்குச் அழைத்துச் செல்வதில் சிரற்ற கால நிலையினால் தடை ஏற்பட்டுள்ளதாக கடற்படை தளபதி கூறினார்

பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேரைக்கொண்ட இந்த குழுவினர் இன்று காலை 6.50 மணியளவில் இலங்கையை வந்தடைந்தனர்.

இவர்களில் மீட்பு பணிகளின் விசேட நிபுணர்களும் இடர்களை மதிப்பிடுபவர்களும் சட்ட ஆலோசகர்களும் அடங்குகின்றனர்.

குழுவினர் கடற்படையினருடன் கல்முனையிலிருந்து, MT New Diamond கப்பல் உள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது..

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka