கலைக்கப்பட்ட அஷ்ரஃபின் கனவுகள் - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முஸ்லிம்களின் தேசியத் தலைவர் கலாநிதி MHMஅஸ்ரஃப் அவர்களின் 20 வது, நினைவு தினம் 2020:09:16 அன்று ஞாபகப்படுத்தப்படும் வேளையில் அவரது ஒரு சில கனவுகளைப் பற்றி நினைவு படுத்தவே இப்பதிவாகும்,

#அஷ்ரஃப்_எனும்_ஆளுமை

அஷ்ரஃப் அவர்கள் ஒரு அரசியல் தலைவராக எம்மால் அறியப்பட்டாலும் அவர் ஒரு சமூகப் போராளி, தனது இளவயது, குடும்பம், சமூக வாழ்க்கை பொருளாதாரம் என்பவற்றை சமூகத்திற்காக அர்ப்பணித்த ஒரு தற்கொடைத் தலைவன்,

#சமூக_வழிகாட்டி,

தலைவர்கள் என்போர் தமது சமூகத்திற்கான வழிகாட்டல்களை தீர்க்கதரிசனமான முறையில் வழங்குபவர்களே ஆகும், மாறாக சமூகம் சிக்கலில் சிக்கிய பின்னர், ஓடி வந்து ஓப்பாரி வைப்போர் அல்ல,

அந்த வகையில் இலங்கையில் இனப்பிரச்சினை நிலவிய காலத்தில் சிறுபான்மைச் சமூகமான தமிழர் சமூகத்துடன் இணைந்து ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்களை ஜனநாயகத்தின் மீதும், தேர்தல்களிலும் நம்பிக்கை வைத்தவர்களாக மாற்றி அரசியல் உரிமைப் போராட்டத்தின் பக்கம் திசை திருப்பி வைத்தவர்,

அஷ்ரஃப் அவர்களின் அன்றைய தீர்க்கதரிசன வழிகாட்டல் இன்றேல் முஸ்லிம் சமூகம் பல அழிவுகளைச் சந்தித்து இருக்கும், அதிலிருந்து சமூகத்தை காப்பாற்றிய வரலாற்று நிகழ்வு
தலைவர் அவர்களின் ஆளுமைக்கான சிறந்த எடுத்துக்.காட்டாகும்.

#கிழக்கின்_இதயம்

இலங்கை முஸ்லிம்களின் பரம்பல் இத்தேசத்தின் பல இடங்களில் இருந்தாலும், கிழக்கு மாகாணம் அம் மக்களின் இதயம் என்பதை எல்லோரும் ஏற்றுத்தான் ஆக வேண்டி உள்ளது, அந்த வகையில் கிழக்கு உணர்வு உள்ளவராக அஃஷ்ரஃப் இவர்கள் செயற்பட்டிருந்தார், அவரது பேச்சு, பண்பு, விருத்தோம்பல் என்பது என்பவற்றை அவர் கைவிடவில்லை, அதே வேளை இலங்கை முஸ்லிம்களின் நலனிலும் அதிக அக்கறை கொண்டிருந்தார், கிழக்கு மக்களின் எண்ணத்திலும், வாக்குகளினாலும் உருவாக்கப்பட்ட SLMC. யின் அரசியல் வளர்ச்சியை கொண்டு அவர் பல இடங்களுக்கும் சேவை செய்திருந்தார்,

#அஸ்ரஃப்பிற்கு_பின்

அஷ்ரஃப் அவர்களின் அகால மரணத்தின் பின்னர் அவரை நம்பி இருந்த சமூகமும், அவரது ஆர்வலர்களும் அனாதை ஆக்கப்பட்டு உள்ளனர் என்றே கூறலாம், அத்துடன் அவரது கனவுகள் இன்றும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதுடன், “தேர்தல்கால தெய்வமாக “மட்டுமே அவர் பாவிக்கப்படுகின்றார்,

அந்தவகையில் அஷ்ரஃப் அவர்கள் உயிரோடு இருக்கும் வேளையில் எவற்றை எல்லாம் விரும்பி கனவு கண்டாரோ, அக்கனவுகள் அவருக்குப் பின் வந்த அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன ,என்பது தெளிவான உண்மை,

#கலைக்கப்பட்ட_கனவுகள் ,

1).அஸ்ரஃப் அவர்கள் கிழக்கு முஸ்லிம்கள் ஒரு முன்னுதாரண சமூகமாகவும், அரசியல் பலமுடைய சமூகமாகவும் வாழ வேண்டும் என விரும்பினார், ஆனால் இன்று கிழக்கில் பௌத்த குடியேற்றம், தமிழர் நில ஆதிக்க மன நிலை, அரசியல் பழிவாங்கள், கல்முனை பிரிப்பு, பிரதேசவாதம் என்பன நிறைந்து காணப்படுகின்றன, அவற்றுக்கான எந்த தீர்வுகளையும் தலைவர்கள் முன்வைக்க வில்லை,

2). அஷ்ரஃப் அவர்கள் உயிருடன் இருக்கும் போது தமது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்யவில்லை, சமூக செயற்பாட்டிலேயே அதிகம் ஈடுபட்டார் ஆனால் தமது மனைவி, அன்பு மகன் அமான் , உடன்பிறந்தோர் , கட்சிக்காக ஆரம்ப காலத்தில் பாடுபட்ட நண்பர்கள் என்பவர்களின் மீது அதிக, அன்பு கொண்டிருந்தார், ஆனால் இன்று அரசியல் ரீதியாகவும், சமூக நிலையிலும் அவர்களுக்கான சரியான அந்தஷ்த்து வழங்கப்படாது தொடர்தும் புறக்கணிக்கப்படுகின்றனர்.

3) அஸ்ரஃப் அவர்கள் தனது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தான் விரும்பிய மக்களுடன் வாழ்ந்து மரணிக்க வேண்டும் என எண்ணி தனக்கான ஒரு “#மக்கள் #சந்திப்பு_மனை” ஒன்றை ஒலுவிலில் கட்டி இருந்தார், தனது கனவுகளான University, Harbour போன்றவற்றை அமைத்த ஊலிலேயே தான் ஓய்வுகாலத்தை கழிக்க வேண்டும் என எண்ணி இருந்தார் ஆனால் அந்த இடம் இன்றும் பாழடைந்து, பற்றைக் காடாகவே காட்சி தருகின்றது, இதனை மறைந்த தலைவரது ஆவணங்கள், வரலாறுகளை உள்ளடக்கிய ஒரு நினைவு காட்சி கூடமாக அமைத்திருக்க முடியும்,

4). தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களின் பண்பாடு, கலாசாரம் ,வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கற்கை நெறிகளும், ஒரு நூதனசாலை அமைத்தலும், அவரது கனவு ஆனால் இது இதுவரை நிறைவேறாமலே உள்ளது,

5) அவரது அன்புக்குரியவர்களுக்கு கட்சியிலோ, பதவிகளிலோ உயர் தரம் வழங்கி இருக்க முடியும். குறைந்தது தலைவரின் வாரிசான அமான் அஷ்ரப் அவர்களையாவது கட்சியின் உயர் பதவிக்கு கொண்டு வந்திருக்க முடியும்

இவ்வாறு அஸ்ரஃபின் எத்தனையோ கனவுகள் கட்டாயக் கருக்கலைப்புச் செய்யப்பட்டுள்ளன, அந்த வகையில் தன்னை, தன் பொருளாதாரத்தை, குடும்பத்தை தியாகம் செய்த ஒரு தலைவனை அவரது இறப்பு நாளில் மட்டும் கடமைக்காக கண்ணியப்படுத்துவதை விட்டு விட்டு,

அவரது கட்சியால், கொள்கைகளால், தியாகத்தினால் தங்களை வளர்த்துக் கொண்டிருக்கும், ஹக்கீம் போன்ற தலைவர்களும், ஏனைய அரசியல்வாதிகளும், அஷ்ரஃபின் கனவுகளை நடைமுறைப்படுத்துவதே, அவருக்கு செய்யும் கைமாறாக அமையும்

மட்டுமல்ல இன்றைய இளம் இருபது வயதினர் அஸ்ரஃப்பை அறியாதவர்களாகவும் உருவாகி உள்ளனர் அவர்களும் மாபெரும் தலைவனை அறிவதற்கான வழிவகைகள் , நிகழ்வுகள், செய்யப்படவேண்டும், அதுவே ஒரு நல்ல தலைவனை மதிக்கும் பண்பாகும், மாறாக அவரது கனவுகளைப் புறக்கணித்து பாதை மாறிச் செல்வது என்பது அவரைப் பழிவாங்குவதாகவே அமைந்து விடலாம்,

முபிஸால் அபூபக்கர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
மெய்யியல் துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
16:09:2020

Web Design by Srilanka Muslims Web Team