20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம் » Sri Lanka Muslim

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

Contributors
author image

Editorial Team

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இரண்டாவது நாளாகவும் இன்று (30) ஆரம்பமாகியுள்ளன.

பிரதம நீதியரசர் தலைமையில் ஐவரடங்கிய குழு முன்னிலையில் குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் (29) குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் வரையில் மனுக்கள் மீதான பரிசீலனையை ஒத்தி வைத்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டிருந்தது.

இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Web Design by The Design Lanka