மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல், குளங்களில் மணல் அகழ்வதற்கு தடை » Sri Lanka Muslim

மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல், குளங்களில் மணல் அகழ்வதற்கு தடை

Contributors
author image

Editorial Team

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.

கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

வயல் நிலங்களை திருத்துவது என்ற போர்வையில் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழும் நடவடிக்கைகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும். இதன் காரணமாக வயல் நிலங்கள் பள்ளமாவதுடன் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குரித்தான குளங்களிலிருந்தும் கனிசமான மணல் அகழ்வதனால் இவற்றின் ஆழம் அளவுக்கதிகமாக அதிகரிப்பதுடன், இங்கு நீர் அருந்தவரும் கால்நடைகள் குளத்தில் மூழ்கி உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இத் திணைக்களங்களுக்குச் சொந்தமான குளங்கள் அத்தியாவசியமாக திருத்தம் செய்யும் தேவைகள் ஏற்படின் அத்திணைக்களங்கள் ஊடாக மாத்திரம் திருத்த வேலைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka