முகாவுக்குள் திடீர் பரபரப்பு ! » Sri Lanka Muslim

முகாவுக்குள் திடீர் பரபரப்பு !

Contributors
author image

Editorial Team

( ஏ.எச்.எம்.பூமுதீன் )

முகா எம்பீக்கள் மூவர் – அரசுடன் இணைவது உறுதியான தகவல் கிடைத்ததை அடுத்து உச்சக்கட்ட பரபரப்பில் கட்சித் தலைவர் ஹக்கீம் காணப்படுவதாக சற்று முன் அறியக் கிடைத்தது.

இதனையடுத்து , அவசர கூட்டமொன்றை ரவூப் ஹக்கீம் இன்று மாலை 4 மணிக்கு கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளார்.

ஹக்கீம் – தனக்கு நெருக்கமான மற்றும் விசுவாசமானவர்களுக்கும் – மேற்படி 3 எம்பீக்களின் நெருக்கமானவர்கள் மற்றும் அவ் எம்பீக்களின் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இன்றைய கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று – அதிகாலை , அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் கிழக்கிலிருந்து கொழும்பை நோக்கி விரைந்து செல்வதாக அறிய முடிந்தது.

அழைப்பு விடுக்கப்பட்டும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள தவறுவோரும் – மேற்படி 3 எம்பீக்களுடன் கட்சி மாறுவோர் என்றே கணக்கிடப்படும் என்றும் – குறித்த அழைப்பின் போது பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலருக்கு – ரவூப் ஹக்கீமே நேரடியாக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி , கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

முகாவின் மேற்படி 3 எம்பீக்களும் அரசுப் பக்கம் பெல்டி அடிப்பார்களாயின் – முகாவின் எம்பீக்கள் எண்ணிக்கை 2 ஆக சுருங்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இன்றைய 4 மணிக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் பதிவேற்றுவேன். இன்ஷா அல்லாஹ்..

Web Design by The Design Lanka