தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கிண்ணியா அல்அக்ஸா தேசிய பாடசாலை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது - Sri Lanka Muslim

தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கிண்ணியா அல்அக்ஸா தேசிய பாடசாலை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது

Contributors
author image

Hasfar A Haleem

அகில இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையிலான நடாத்தப்பட்ட 12 வயதுக்குட்பட்ட உதைப் பந்தாட்டப் போட்டியில் கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலை சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

 (09) பதுளையில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாண ஹென்றிக் பாடசாலையும் கிண்ணியா அல் அக்சா தேசிய பாடசாலையும் ஒன்றையொன்று எதிர்த்தாடினர்.

மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் கிண்ணியா அல்அக்ஸா பாடசாலை அணியினர் மூன்று கோள்களை பெனக்டி மூலம் போட்டு சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். “Road to Barecelona “எனும் கிண்ணத்தை இவ் அணியினர் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.இதற்கான பூரண அனுசரனையை மைலோ நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலை அணியினருக்கு அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் நன்றிகளையூம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

IMG-20180809-WA0007

Web Design by Srilanka Muslims Web Team