'UAE சர்வதேச லீக் T20' தொடரில் 8 இலங்கை வீரர்களுக்கு இடம்! - Sri Lanka Muslim

‘UAE சர்வதேச லீக் T20’ தொடரில் 8 இலங்கை வீரர்களுக்கு இடம்!

Contributors

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சர்வதேச லீக் டி20 தொடருக்கு இலங்கையின் எட்டு வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஆறு அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய பிரிமியர் லீக் தொடருக்கான அணிகளின் உரிமையாளர்களும் இந்தத் தொடருக்கான அணிகளுக்கு உரிமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போதைய நிலையில் பங்களாதேஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறவில்லை. வெளிநாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை எதிர்ப்பை வெளியிட்டு வருவதோடு, பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை அனுமதி அளிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.\

எனினும் இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளின் முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இலங்கையின் வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர, பானுக்க ராஜபக்ஷ, லஹிரு குமார, சீகுகே பிரசன்ன, சரித் அசலங்க, இசுரு உதான மற்றும் நிரோசன் திக்வல்ல ஆகிய வீரர்களின் பெயர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டு தொடரில் 34 போட்டிகள் இடம்பெறவுள்ளன. அனைத்து அணிகளும் மற்றைய அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடவிருப்பதோடு, தொடர்ந்து இறுதிப் போட்டி உட்பட நான்கு பிளே ஓப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. போட்டிகள் டுபாய், அபூதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும்.

Web Design by Srilanka Muslims Web Team