எழுச்சி பெறும் பொலன்னறுவை திட்டத்தில் மன்னம்பிட்டிய வைத்தியசாலை கட்டிடம் ஜனாதிபதியால் திறப்பு
பொலன்னறுவை மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ” எழுச்சி பெறும் பொலன்னறுவை” திட்டத்தின் மூன்று நாள் நிகழ்ச்சித் திட்டங்களில் (02) பங்கேற்று 2016 தொடக்கம் 2020 க்குட்பட்ட திட்டங்களுக்கான திட்டத்தில் பொலன்னறுவை மன்னம் பிட்டிய வைத்தியசாலைக்கான கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபாலசிறி சேனவினால் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம அவர்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டன.
சுமார் 60000 மில்லியன் ரூபா செலவில் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில்180 திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. இக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்த பின்பு அங்குள்ள ஞாபக ஏட்டிலும் ஜனாதிபதி,ஆளுனர் கொயொப்பமிட்டனர்.
இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம, ஜனாதிபதியின் புதல்வர் டகம் தாரக சிரிசேன,கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண ,கிழக்கு ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன, ஊடகச் செயலாளர் ஏ.எம்.ஹஸன் அலால்தீன் உட்பட அரசியல் பிரமுகர்கள்,அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்
