முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம்: அறிவுறுத்தல் கருத்தரங்கு
முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம் பற்றிய நீதியரசா் சலிம் மர்சூப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அகியோா்கள் நீதியமைச்சுக்குச் சமா்ப்பித்த அறிக்கைகளின் வித்தியாசமான சர்த்துக்கள் பற்றி அல்முஸ்லிமாத் ஆதரவுடன் டொக்டர் மரினா றிபாய் தலைமையில் அறிவுறுத்தல் ஒன்று நேற்று (29) சனிக்கிழமை கொள்ளுப்பிட்டியில் குயின்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதில் 110க்கும் மேற்பட்ட கொழும்பு பிரதேசங்களில் இருந்து முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனா். இத் தெளிவூட்டலின் பின்னா் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், மற்றும் இஸ்லாமியச் சட்டங்கள் முஸ்லிம் சட்டங்கள் பற்றி அறிந்து கொண்டதாகவும் அங்கு சமுகமளித்திருந்த பெண்கள் தெரிவித்தனா்.
இதுவரை இவ் அறிக்கை மற்றும் பசஹ், மத்தபஹ் , வலி, கைக்கூலி, பலதரப்பட்ட திருமணம், தலாக், பதிவு, கலியான வயது, பெண்காதி, ஜூரி, மத்தாஹ், இத்தாஹ் இருத்தல் . இந்த நாட்டில் பதவிவகிக்கின்ற 65 காதி நீதிபதிகள் நீதிமன்றங்கள் உள்ளன. அவா்களுக்கு மாதம் வழங்கப்படுகின்ற 16ஆயிரம் ருபா சம்பளம் , 1952ஆம் ஆண்டு இயற்றிய இந்தச் சட்டம் போன்ற விடயங்களை இன்றுதான் இந்த அறிக்கையினை ஆராய்ந்தபோதே தாங்கள் அறிந்து கொண்டதாகவும் பங்குபற்றியவா்கள் தெரிவித்தாா்கள்.
அல்முஸ்லிமாத் தலைவி ஹம்சியா சகீட் (தலைவி) கைருநிஸா (செயலாளா்) பேச்சாளா் கைருநிசா செயத் அபுபக்கா் ஆகியோறும் பிரதான மேடையில் அமா்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.

