திருகோணமலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்!

ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று திருகோணமலை – பாலமோட்டாறு பகுதியில் வைத்து பாதையை விட்டு விலகி, இன்று (07) காலை விபத்துக்குள்ளானது.

இதில் பஸ் சாரதி உட்பட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்  26 படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous post சஜித் தலைமையில் இன்றும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!
Next post இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி நியமனம்!