2022 – LPL தொடர் இன்று ஆரம்பம்!
மூன்றாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) டி20 கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டையில் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது.
மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 42 இலங்கை வீரர்கள் மற்றும் 30 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் நடப்புச் சம்பியனும் தொடர்ந்து இரண்டு முறையும் கிண்ணத்தை வென்ற அணியுமான ஜப்னா கிங்ஸ் அணி திசர பெரேரா தலைமையில் களமிறங்குகிறது.
கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு குசல் மெண்டிஸும், கொலொம்போ ஸ்டார்ஸ் அணிக்கு அஞ்சலோ மத்தியுஸும், தம்புல்ல அவுரா அணிக்கு தசுன் சானக்கவும் கண்டி வொரியர்ஸ் அணிக்கு வனிந்து ஹசரங்கவும் தலைவராக செயற்படவுள்ளனர்.
வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக பாகிஸ்தானின் எட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கான் அணிகளைச் சேர்ந்த தலா ஆறு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆரம்பப் போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளதோடு தொடர்ந்து பல்லேகலவிலும் பின்னர் இறுதிக் கட்டப் போட்டிகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்திலும் நடைபெறவுள்ளன. தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர் 23ஆம் திகதி நடைபெறும்.
More Stories
முட்டை விலை அதிகரிப்பு!
அண்மைக்காலமாக 30 ரூபாய்க் விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் செல்வாக்கு...
புத்தளத்தில் கூட்டமைப்பாக செல்வது தொடர்பில் மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு!
புத்தளத்தில் பாராளுமன்ற தேர்தலை கூட்டமைப்பாக செல்வதற்கான முயற்சிகளை புத்தளம் பெரிய பள்ளி, ஜமிய்யதுல் உலமா மற்றும் புத்திஜீவிகள் குழு இணைந்து முன்னெடுத்துச் சென்றது.. இந்த முன்னுதாரணமான, சமூகத்தின்...
கடந்த ஆட்சியின் 3 திட்டங்கள் நிறுத்தம்!
கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் சேவையை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் 'வெளிநாட்டில் உள்ள...
“கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம்; அம்பாறையில் இழுபறி நிலவ இதுவே காரணம்” – ரிஷாட்!
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித்...
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் NPP யின் நிலைப்பாடு!
ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டு அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது மோசடி காரணமாக அல்ல உண்மையை பேசியதால் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். திருட்டு, மோசடிகளுக்கு எதிராக...
தந்தையையும், மகளையும் காணவில்லை – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!
நீர்கொழும்பில் இருந்து காணாமல் போன ஒரு ஆண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன தமது மகள் தொடர்பில் அவரின்...
