மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!
அநுராதபுரம், மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் அல்-ஆலீம்களுக்கான 02ஆவது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) மதவாச்சி, முகையதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
அரபுக் கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் சஹாப்தீன் மற்றும் அதிபர் அஷ்-ஷெய்ஹ் பாயிஸ் (றஷாதி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், விஷேட பேச்சாளராக ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வா குழு உறுப்பினர் யஹ்யா (பலாஹி) சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் உபதலைவர் கலீலுல் ரஹ்மான் உள்ளிட்ட பல உலமாக்களும் புத்திஜீவிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது, 15 மாணவர்களுக்கு “அல்-ஆலிம்” பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
More Stories
முட்டை விலை அதிகரிப்பு!
அண்மைக்காலமாக 30 ரூபாய்க் விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் செல்வாக்கு...
புத்தளத்தில் கூட்டமைப்பாக செல்வது தொடர்பில் மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு!
புத்தளத்தில் பாராளுமன்ற தேர்தலை கூட்டமைப்பாக செல்வதற்கான முயற்சிகளை புத்தளம் பெரிய பள்ளி, ஜமிய்யதுல் உலமா மற்றும் புத்திஜீவிகள் குழு இணைந்து முன்னெடுத்துச் சென்றது.. இந்த முன்னுதாரணமான, சமூகத்தின்...
கடந்த ஆட்சியின் 3 திட்டங்கள் நிறுத்தம்!
கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் சேவையை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் 'வெளிநாட்டில் உள்ள...
“கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம்; அம்பாறையில் இழுபறி நிலவ இதுவே காரணம்” – ரிஷாட்!
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித்...
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் NPP யின் நிலைப்பாடு!
ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டு அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது மோசடி காரணமாக அல்ல உண்மையை பேசியதால் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். திருட்டு, மோசடிகளுக்கு எதிராக...
தந்தையையும், மகளையும் காணவில்லை – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!
நீர்கொழும்பில் இருந்து காணாமல் போன ஒரு ஆண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன தமது மகள் தொடர்பில் அவரின்...
