3 கோடி பெறுமதியான திமிங்கல அம்பருடன் 3 சந்தேக நபர்கள் கைது!

மிதக்கும் தங்கம் எனப்படும் சுமார் 3 கோடி பெறுமதியான 4 கிலோ 500 கிராம் திமிங்கல அம்பர் (திமிங்கல வாந்தி) சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாராக இருந்த மூன்று சந்தேக நபர்கள் தெவிநுவர மற்றும் நகுலகமுவ பிரதேசத்தில் மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous post கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லுாரியின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வு!
Next post சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்!