Le Jacques – கொழும்பை வந்தடைந்த பிரான்ஸின் அதிசொகுசு கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை பிரான்ஸில் இருந்து லீ ஜாக்ஸ் (Le Jacques) என்ற அதிசொகுசு கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலானது இன்று(08.02.2024) காலை முதல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்த அதிசொகுசு கப்பலில் 130 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 120 பணியாளர்களுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணிக்கவுள்ளதோடு,  குறித்த கப்பல் தாய்லாந்தை நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous post கட்டார் – இந்தியா நாடுகளுக்கிடையில் 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒப்பந்தம்!
Next post இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்ட நடைமுறையாக்கம் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் – பிரித்தானியா!