அரச சொத்துக்களை விற்பதை நிறுத்துமாறு வலியுறுத்து!
தேசியத் தேர்தல் எதிர்வருவதைத் தொடர்ந்து அரச சொத்துக்களை விற்பதை நிறுத்துமாறு நேற்றைய தினம் அரசாங்கத்தை வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி (NPP), எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்குமென்பதால் அரச சொத்துக்களை வாங்குவதில் ஆர்வமுள்ள தரப்பினர் தமது முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு எச்சரித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், டெலிகொம், CEB மற்றும் Litro Gas போன்ற அரச சொத்துக்களை அரசாங்கம் அடுத்த தேர்தலில் தெரிவு செய்யப்பட மாட்டோம் என்பதை அறிந்து தரகுப்பணம் பெறுவதற்காக பேரம் பேசி அவற்றை விற்க திட்டமிட்டுள்ளதாக NPP பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அரச வளங்களையோ, அரச நிறுவனங்களையோ அல்லது நிறுவனங்களையோ விற்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், பெரும் தரகுப்பணத்தை பெறுவதற்காக இத்தகைய சொத்துக்களை அவசரமாக விற்கும் திட்டங்களை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வருங்கால சந்ததியினரை பாதிக்கும் அரச வளங்களை விற்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக மக்கள் முன்வர வேண்டும் என்று கூறிய ஹந்துன்நெத்தி, சீனா அல்லது இந்தியா போன்ற எந்தவொரு ஆர்வமுள்ள தரப்பினரும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் எதிர்காலத்தில் மக்களின் ஆணையைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அத்தகைய ஒப்பந்தங்களுக்கு எதிராக முடிவெடுக்கும் என்றும் கூறினார்.
