தேர்தல் பிரசாரங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு!
தேர்தல் பிரசாரங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்திய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக “சுரகிமு தருவென்“ தேசிய இயக்கம் இன்று (11) தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் “சுரகிமு தருவென்“ (குழந்தைகள் பாதுகாப்பு) தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் பிரியந்த ஹேரத், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, இந்த விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.
More Stories
முட்டை விலை அதிகரிப்பு!
அண்மைக்காலமாக 30 ரூபாய்க் விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் செல்வாக்கு...
புத்தளத்தில் கூட்டமைப்பாக செல்வது தொடர்பில் மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு!
புத்தளத்தில் பாராளுமன்ற தேர்தலை கூட்டமைப்பாக செல்வதற்கான முயற்சிகளை புத்தளம் பெரிய பள்ளி, ஜமிய்யதுல் உலமா மற்றும் புத்திஜீவிகள் குழு இணைந்து முன்னெடுத்துச் சென்றது.. இந்த முன்னுதாரணமான, சமூகத்தின்...
கடந்த ஆட்சியின் 3 திட்டங்கள் நிறுத்தம்!
கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் சேவையை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் 'வெளிநாட்டில் உள்ள...
“கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம்; அம்பாறையில் இழுபறி நிலவ இதுவே காரணம்” – ரிஷாட்!
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித்...
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் NPP யின் நிலைப்பாடு!
ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டு அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது மோசடி காரணமாக அல்ல உண்மையை பேசியதால் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். திருட்டு, மோசடிகளுக்கு எதிராக...
தந்தையையும், மகளையும் காணவில்லை – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!
நீர்கொழும்பில் இருந்து காணாமல் போன ஒரு ஆண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன தமது மகள் தொடர்பில் அவரின்...
