சஜித்தின் தேர்தல் காரியாலயம் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளார் சஜித் பிரேமதாசவின் தேர்தல் காரியாலயம், செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை 1.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு, முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காரியாலயத்துக்கு பொறுப்பாக தங்கியிருந்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பதாதைகள் மற்றும் உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous post கட்சிக்கு துரோகமிழைத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாலேயே ராஜபக்ஷக்களின் கொடிய கரங்கள் பலப்பட்டன” – அனுராதபுரத்தில் ரிஷாட்!
Next post Video – “மாற்றம் கோரும் தேசிய மக்கள் சக்தி முதலில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்” – கிண்ணியாவில் ரிஷாட்!